News October 6, 2025
இருமல் டானிக் விவகாரம்: டாக்டர் மட்டுமா பொறுப்பு?

ம.பி.,யில் <<17921980>>இருமல் டானிக் <<>>குடித்த 16 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், டாக்டர் சோனியை கைது செய்ததற்கு தேசிய மருத்துவ ஆணையம் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. ஒரு டாக்டர் மட்டும் இதற்கு பொறுப்பாக முடியுமா எனவும், அந்த குறிப்பிட்ட மருந்து நிறுவனத்திற்கு அரசு அனுமதி அளித்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், அந்த டாக்டரை விடுவிக்க மத்திய சுகாதார அமைச்சகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது.
Similar News
News October 7, 2025
ராசி பலன்கள் (07.10.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News October 7, 2025
மெசேஜ்களில் வாக்குவாதம் செய்கிறீர்களா?

எந்த ஒரு உறவிலும் சண்டை, முரண்கள் இருப்பது இயல்புதான். ஆனால், மெசேஜ்களில் வாக்குவாதத்தில் ஈடுபடுவது அதிக ஆபத்தை தரும் என USA பல்கலை.,-யின் ஆய்வில் தெரியவந்துள்ளது. அது நேரில் ஈடுபடுவதை விட 3 மடங்கு அதிக தாக்கத்தையும், 4 மடங்கு அதிக எரிச்சலையும் ஏற்படுத்தும் என கூறப்பட்டுள்ளது. எனவே சின்ன சண்டைகள் கூட உறவு விரிசலுக்கு வழிவகுக்கலாம். ஆதலால், எதுவாக இருப்பினும் நேரில் பேசுவதே ஆகச்சிறந்தது.
News October 7, 2025
தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்புகள்

தேர்தல் ஆணையத்தால் கொண்டுவரப்பட்ட 17 புதிய சீர்திருத்தங்கள் பிஹார் தேர்தலில் இருந்து நடைமுறைக்கு வர உள்ளன. அவற்றில் முக்கியமானவை: * வாக்குச் சாவடி நிலை முகவர்கள், அதிகாரிகள், காவல்துறையினருக்கு பயிற்சி * EPIC அட்டைகளை இலவசமாக வழங்குதல் * BLO-க்களுக்கு புகைப்பட அடையாள அட்டைகள் * வாக்குச் சாவடிகளில் (PS) மொபைல் டெபாசிட் வசதி * ஒரு PS-க்கு 1200 வாக்காளர்கள் வரம்பு.