News October 9, 2025
இருமல் சிரப் விவகாரம்: விளக்கம் கேட்கும் WHO

குழந்தைகள் உயிரிழப்பை ஏற்படுத்திய <<17955764>>இருமல் சிரப்<<>>, பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டதா என்பது குறித்து இந்திய அதிகாரிகளிடம் WHO விளக்கம் கேட்டுள்ளது. இந்தியா தரும் விளக்கத்தை பொறுத்து, சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட ‘Coldrif’ இருமல் சிரப் குடித்து ம.பி., ராஜஸ்தானில் 21 குழந்தைகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 9, 2025
காங்., கூட்டத்திலும் TVK கொடி பறந்தது: செல்வப்பெருந்தகை

அதிமுக தவெக கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளதாக, EPS சூசகமாக தெரிவித்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியது. இதனிடையே அதற்கு வாய்ப்பில்லை என தெரிவித்த செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் கூட்டத்திலும் தவெக கொடி பறந்ததாகவும் கூறியுள்ளார். EPS காண்பது பகல் கனவு என்றும், யாரும் அதிமுக கூட்டணியில் சேர மாட்டார்கள் எனவும் விமர்சித்துள்ளார்.
News October 9, 2025
BREAKING: இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2025-ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு, ஹங்கேரி எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாகோர்காய் என்பவருக்கு வழங்கப்படுவதாக நோபல் கமிட்டி அறிவித்துள்ளது. பேரழிவுக் காலத்தில் இலக்கியம் மூலம் ஆற்றிய பங்களிப்புக்கும், கலையின் ஆற்றலை நிலைநிறுத்தியதற்கும் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். Satantango, War & War, Seiobo There Below, The Last Wolf and Herman உள்ளிட்டவை இவரின் முக்கிய நூல்களில் அடங்கும்.
News October 9, 2025
இலங்கை கடற்படை அட்டூழியம்: ஸ்டாலின் கடிதம்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே தமிழக மீனவர்கள் 30 பேர் உள்பட 47 மீனவர்களை இலங்கை கடற்படை இன்று கைது செய்தது. இந்நிலையில், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க கோரி வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க கூட்டு பணிக்குழுவை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார்.