News October 12, 2025
இருமல், சளியா? Syrup-க்கு Bye, இதோ தங்க கசாயம்!

இருமல், சளியில் இருந்து விடுபட <<17955802>>Syrup<<>>எடுக்கலாம் என்றால், அதில் இப்போ பிரச்னை; இந்நிலையில், தங்க கசாயம் சாப்பிட்டாலே போதும் என்கின்றனர் சித்த மருத்துவர்கள். செய்முறை: ஒரு டம்ளர் காய்ச்சிய பாலில், மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன், பனை வெல்லம் சுவைக்கு ஏற்ப, திரிகடுகப் பொடி 10 மி.கி. போட்டு தினமும் அருந்த வேண்டும். பலன்கள்: இந்த கசாயம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், உடலில் உள்ள தொற்றுகளை நீக்கும்.
Similar News
News October 12, 2025
BREAKING: கரூர் துயரம்.. அதிரடி கைது

கரூர் துயர சம்பவத்தில் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பியதாக திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் S.M.நிர்மல்குமாரை சாணார்பட்டி போலீசார் கைது செய்தனர். அவரிடம் N.ஆனந்த், CTR நிர்மல்குமார் ஆகியோர் எங்கே இருக்கின்றனர் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக இவ்வழக்கில் கரூர் மேற்கு மா.செ., மதியழகனும், சேலம் கிழக்கு மா.செ., வெங்கடேசனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
News October 12, 2025
தீபாவளிக்கு இதை செய்தால் கண்டிப்பா ஜெயில்தான்!

தீபாவளி கொண்டாட்டத்தின் போது வேண்டுமென்றே விலங்குகளை துன்புறுத்தும் வகையில் பட்டாசுகளை வெடிக்காதீங்க. அத்தகைய சம்பவங்களில் ஈடுபடுவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது. இது குறித்து புகாரளிக்கவும், காயமடைந்த விலங்குகளுக்கு சிகிச்சையளிக்கவும் ‘1962’ என்ற நம்பருக்கு அழைக்கலாம். எனவே எந்த ஜீவனுக்கும் இடையூறு செய்யாமல் தீபாவளி பண்டிகையை கொண்டாடுங்கள். SHARE.
News October 12, 2025
கர்ப்பிணிகளுக்கு இலவசங்களை வழங்கும் திட்டம்

கர்ப்பிணி பெண்களையும், குழந்தையை பெற்றெடுத்த தாய்மார்களையும் பாதுகாக்க சுரக்ஷித் மாத்ரித்வா ஆஷ்வாசன் சுமன் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம், கர்ப்பிணிகளுக்கு இலவச பிரசவம், இலவசமாக மருந்துகள், இலவச போக்குவரத்து வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க, அருகில் உள்ள அரசு ஹாஸ்பிடலை அணுகுங்கள். கர்ப்பிணிகளுக்கு இத SHARE பண்ணுங்க.