News November 16, 2024

இஸ்ரோவுக்கு செலவு ₹1, வரவு ₹2.54: சோம்நாத்

image

இஸ்ரோவுக்காக ₹1 செலவிட்டால், ₹2.54 வருவாய் கிடைப்பதாக சோம்நாத் கூறியுள்ளார். கர்நாடகாவில் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடிய அவர், இஸ்ரோவின் நிதித் தேவைக்காக அரசை மட்டும் சார்ந்திருக்காமல் வணிக வாய்ப்புகளை நாங்களே உருவாக்குகிறோம் என்றார். மேலும், 2023இல் இஸ்ரோவின் வருவாய் $6.3 பில்லியனாக உயர்ந்த நிலையில், நடப்பாண்டில் $8.4 பில்லியனாக உயரும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Similar News

News March 30, 2026

நாளை மறுநாள் பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் ஆணை

image

பங்குனி உத்திர விழாவையொட்டி, நாளை மறுநாள் (ஏப்.1-ம் தேதி) தென்காசி, நெல்லை மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் செயல்படாது. அதேபோல், நார்த்தாமலை தேர் திருவிழாவை முன்னிட்டு ஏப்.6-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாகும். முழு ஆண்டு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது. SHARE IT

News March 30, 2026

1 கேஸ் சிலிண்டர் ₹6,500.. அதிர்ச்சி தகவல் வெளியானது

image

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அரசு தொடர்ந்து விளக்கம் அளித்து வருகிறது. ஆனால், சென்னையில் தட்டுப்பாடு காரணமாக வணிக சிலிண்டர் கள்ளச் சந்தையில் ₹6,500 வரை விற்கப்பட்டு வருவதாக ஹோட்டல் நடத்துபவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், உணவு பொருள்களின் விலையை உயர்த்த வேண்டிய நிலை இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். உங்க ஊரில் டீ, காஃபி விலை உயர்த்தப்பட்டுள்ளதா?

News March 30, 2026

ஈரான் எண்ணெய் வளத்தை கைப்பற்றுவோம்: டிரம்ப்

image

ஈரானின் எண்ணெய் வளத்தை கைப்பற்ற விரும்புவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா – ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படும் நிலையில், ஈரானின் ஆயில் ஏற்றுமதி மையமாக உள்ள கர்க் தீவை அமெரிக்கா கைப்பற்றக்கூடும் என்று டிரம்ப் தெரிவித்தார். மேலும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா தனது ராணுவ இருப்பை அதிகரித்து வருகிறது.

error: Content is protected !!