News September 23, 2025
வாக்கு திருட்டு நடக்கும் வரை உழலும் நீடிக்கும்: ராகுல்

வாக்குகளை திருடி, அமைப்புகளை கைப்பற்றி பாஜக ஆட்சியில் அமர்ந்ததால் தான், நாட்டில் வேலையின்மை தலை விரித்து ஆடுவதாக ராகுல் காந்தி சாடியுள்ளார். வருங்காலத்திற்காக இளைஞர்கள் கடினமாக உழைத்து வரும் நிலையில், PM மோடியோ தனது பணக்கார நண்பர்கள் ஆதாயம் அடைய பாடுபடுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், வாக்கு திருட்டு நடைபெறும் வரை, இந்தியாவில் ஊழலும், வேலையின்மையும் நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 23, 2025
விஜய்யை துரத்தும் IT வழக்கு

புலி படத்திற்காக பெறப்பட்ட ₹15 கோடியை மறைத்ததாக, 2022-ல் ₹1.50 கோடி விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து HC-ல் விஜய் தாக்கல் செய்த மனு மீதான இன்றைய விசாரணையில், இது காலதாமதமான நடவடிக்கை எனவும், எனவே IT பிறப்பித்த உத்தரவை செய்ய வேண்டும் என்றும் விஜய் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், அபராதம் விதித்தது சரிதான் என IT தரப்பு கோரியது. இதனையடுத்து அக்.10-க்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
News September 23, 2025
தமிழ் நடிகர்களின் முதல் தேர்தல் களம் எப்படி இருந்தது?

விஜய்க்கு கூடுவது ரசிகர் கூட்டம், அது வாக்காக மாறாது, அவருக்கு அரசியல் அனுபவம் இல்லை என்பதே தற்போது தமிழக அரசியல் களத்தில் விஜய் மீது வைக்கப்படும் பெரும்பான்மை விமர்சனங்கள். இந்நிலையில், கட்சி தொடங்கிய தமிழ் நடிகர்கள் போட்டியிட்ட முதல் தேர்தல் நிலவரத்தை மேலே swipe செய்து பாருங்கள். விஜய் எந்த தொகுதியில் போட்டியிடலாம், எவ்வளவு வாக்குகளை அவர் பெறுவார் என்பதை கமெண்ட்ல சொல்லுங்க.
News September 23, 2025
பள்ளிகளுக்கு 9 நாள்கள் விடுமுறை

இந்த வார இறுதியில் இருந்து பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறையாகும். செப்.10-ம் தேதி முதல் நடைபெற்று வரும் காலாண்டு தேர்வு வரும் வெள்ளியுடன் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, செப்.27 முதல் அக்.5 வரை 9 நாள்கள் தொடர் விடுமுறையாகும். இதனையொட்டி, சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக சிறப்பு பஸ்கள், ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணத்தை சரியாக திட்டமிடுங்கள் நண்பர்களே! SHARE IT.