News November 15, 2024
ஊழல் ஆட்சி நடத்திய இபிஎஸ்: ஸ்டாலின் தாக்கு

பிரச்னைகளை டிவி பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என சிலர் கடந்த காலத்தில் கூறினர். ஆனால் நான் பிரச்னைகளை எதிர்கொண்டு, தீர்த்து வைக்கிறேன் என EPSக்கு ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். அதிமுக ஆட்சியில் நடத்திய முதலீட்டாளர்கள் மாநாட்டில் எவ்வளவு முதலீடு வந்தது எனக்கூற முடியுமா? என கேள்வி எழுப்பிய அவர், மக்கள் எனக்கு அளிக்கும் ஆதரவைக் கண்டு ஊழல் ஆட்சி நடத்திய EPSக்கு கலக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் சாடினார்.
Similar News
News March 1, 2026
ஓபிஎஸ்சுக்கு சபாநாயகர் பதவி வழங்க திட்டமிடும் திமுக

திமுகவில் இணைந்த OPS-க்கு முக்கியமான பொறுப்பு வழங்க ஸ்டாலின் திட்டமிட்டு வருவதாக தகவல் கசிந்துள்ளது. CM உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்த அவருக்கு, <<19251115>>திமுகவில் துணை பொதுச்செயலாளர்<<>> பதவி வழங்கப்படும் என அறிவாலய வட்டாரத்தில் ஏற்கெனவே பேச்சு அடிபட்டது. இந்நிலையில், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், OPS-க்கு சபாநாயகர் பதவி வழங்கவும் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
News March 1, 2026
அரசியல் கட்சிகளின் முதல்படி எப்போது?

2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கி வருகின்றன. தற்போதைய நிலவரப்படி திமுக+, அதிமுக+, நாதக, தவெக என 4 முனைப்போட்டி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்நிலையில், தற்போது களத்தில் உள்ள பிரதான அரசியல் கட்சிகள் எப்போது தொடங்கப்பட்டன என்பதை மேலே உள்ள போட்டோஸை swipe செய்து பாருங்கள். SHARE
News March 1, 2026
இந்தியா வந்த கமேனி… எப்போது தெரியுமா?

ஈரானின் உச்ச தலைவராவதற்கு முன்பு, 1980-81 காலகட்டத்தில் கமேனி இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார். ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் அதிகமுள்ள கர்நாடகாவின் அலிப்பூரில் ஹாஸ்பிடல் ஒன்றுக்கு அவர் அடிக்கல் நாட்டியுள்ளார். அதேபோல், ஸ்ரீநகரில் உள்ள மசூதி ஒன்றிலும் உரையாற்றிய அவர், காந்தி, நேரு, மௌலானா அபுல் கலாம் ஆசாத் உள்ளிட்ட தலைவர்களை பாராட்டியும் பேசியுள்ளார்.


