News March 26, 2025
திருப்பணியில் ஊழலா? பக்தர்கள் அதிர்ச்சி!

திருச்செந்தூரில் பக்தர்களுக்காக கட்டப்பட்ட கழிவறை தரமற்றதாக இருப்பதாக சர்ச்சை எழுந்தது. கோயில் பணியில் ஊழல் நடந்துள்ளதாக அண்ணாமலையும் சாடியிருந்தார். இந்நிலையில் வழக்கறிஞர் ராமநாத ஆதித்தன் என்பவர் RTI மூலம் பெற்ற தகவலில் ₹300 கோடி செலவில் நடக்கும் கோயில் திருப்பணிக்கு, வரைபடம் தயாரிக்க மட்டும் Pvt நிறுவனத்திற்கு ₹8 கோடி வழங்கியது தெரியவந்துள்ளது. இந்த தகவலால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Similar News
News December 1, 2025
ராணிப்பேட்டை: 10th முடித்தால் எய்ம்ஸ்-ல் வேலை ரெடி.! APPLY

ராணிப்பேட்டை மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் <
News December 1, 2025
அண்ணாமலை கொடுக்கும் கல்யாண கிஃப்ட்டின் ரகசியம்?

அண்ணாமலை, தான் பங்கேற்கும் அனைத்து திருமணங்களிலும் ஒரே மாதிரியான கிஃப்ட்டை தான் கொடுக்கிறார். அது என்னவாக இருக்கும் என்றே பலரும் தேடி வருகின்றனர். திருமணம் மங்களகரமானது. இதனை வெளிப்படுத்தும் விதமாக, விவசாயிகளிடம் இருந்து மஞ்சளை நேரடியாக வாங்கி அதை பதப்படுத்தி, அரைத்து கண்ணாடி பாட்டிலில் அடைத்து பரிசளித்து வருகிறாராம். இந்த ஐடியாவும் நல்லா இருக்கே.. நாமளும் பாலோ பண்ணலாம்!
News December 1, 2025
அரை நாள் விடுமுறையா? காலையில் இருந்து விடாத மழை

காலையில் இருந்து தற்போது வரை சென்னையில் இடைவிடாமல் மழை பெய்து வருவதால், மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி, தனியார் பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டதாக பெற்றோருக்கு மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. இதேபோல் அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


