News January 3, 2025
பள்ளிப் பாடத்தில் தேசத் தந்தையின் பெயர் திருத்தம்

வங்கதேசத்தின் தந்தை எனப் போற்றப்படும் முஜிபுர் ரஹ்மானின் பெயரைப் பள்ளி பாடப் புத்தகத்திலிருந்து நீக்கியுள்ளது தற்காலிக அரசு. 1971 மார்ச் 26ஆம் தேதி, விடுதலையை அறிவித்த முஜிபுரின் பெயரை நீக்கிவிட்டு, ஜியாவுர் ரஹ்மான்தான் அதைச் செய்ததாகத் திருத்தப்பட்டுள்ளது. முன்னதாக ஆட்சி மாற்றத்திற்கு காரணமான இடஒதுக்கீடு போராட்டத்தின் போது முஜிபுரின் சிலை, ஓவியங்கள் சேதப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 15, 2025
ராசி பலன்கள் (15.12.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News December 15, 2025
திகார் ஜெயிலை இடமாற்ற டெல்லி அரசு முடிவு

தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய ஜெயிலாக அறியப்படும் டெல்லியின் திகார் ஜெயிலை வேறு இடத்திற்கு மாற்ற பணிகள் நடந்து வருவதாக டெல்லி CM ரேகா குப்தா தெரிவித்துள்ளார். அதிக எண்ணிக்கையிலான கைதிகளுடன் சிறைச்சாலையின் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். தற்போது இங்கு 9,000-க்கும் மேற்பட்ட கைதிகள் அதிகமாக உள்ளனர்.
News December 15, 2025
அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது உத்தரவு

சமூக நலத்துறை தரப்பில் கடந்த மாதம் எடுத்த கணக்கெடுப்பில், 4,68,554 மாணவர்களில் 2,87,997 மாணவர்கள் மட்டுமே காலை உணவுத் திட்டத்தை பயன்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி அடைந்துள்ளதாம். இதனால், இத்திட்டத்தின் செயலாக்கம் குறித்து பள்ளிகளில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க தொடக்கக்கல்வி இயக்குநர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.


