News March 17, 2024
வேளச்சேரியில் 120 நாய்கள் மாநகராட்சி மீட்பு

வேளச்சேரியில் ஆண்டாள் அவென்யூ தெருவை சேர்ந்தவர் ஹேமலதா. இவரது வீட்டில்,100-க்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்து வந்த நிலையில், அதன் குரைக்கும் சத்தத்தினால் பாதிக்கப்பட்ட அக்கம்பக்கத்தினர், நாய்களை மீட்டுச் செல்ல கோரி கடந்த நவம்பர் மாதம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில், நாய்களை அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்பேரில், 120 நாய்களை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று மீட்டனர்.
Similar News
News January 31, 2026
ஆம்ஸ்ட்ராங் பிறந்த நாள் போலிஸ் பாதுகாப்பு அதிகரிப்பு!

மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் பிறந்த நாளையொட்டி இன்று பெரம்பூர் வேணுகோபால் தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கொலையாளிகளில் முக்கிய நபரான பொன்னை பாலு, அவரது தாயாரின் மரணத்தையொட்டி இடைக்கால ஜாமீனில், புழல் சிறையில் இருந்து வெளிவந்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
News January 31, 2026
சென்னை நந்தனம் கல்லூரிக்கு புதிய RULES!

சென்னை நந்தனம் அரசு கல்லூரி கேண்டீனில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், கேண்டீன் ஊழியர் பாக்யராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை 3 நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், மாலை 6 மணிக்கு மேல் கல்லூரி வளாகத்திற்குள் யாரும் இருக்க கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
News January 31, 2026
சென்னை: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

சென்னையில், வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். ஷேர்!


