News September 23, 2025
Corona செய்தி வெளியிட்டவருக்கு மீண்டும் சிறை

கொரோனா தொடர்பான செய்திகளை பகிர்ந்ததால் சீன பத்திரிகையாளர் ஜாங் ஜான் 2020-ல் கைது செய்யப்பட்டு 4 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். 2024 மே மாதத்தில் விடுவிக்கப்பட்ட இவரை, சீனாவின் மதிப்பை குலைத்ததாக கூறி மீண்டும் 2024 ஆகஸ்டில் கைது செய்தது அந்நாட்டு அரசு. இந்நிலையில், மீண்டும் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகிறன.
Similar News
News September 23, 2025
சின்ன பாலம்.. பல உயிர்களுக்கு பெரிய வெற்றி!

சாலையில் குரங்குகளும், அணில்களும் வாகனங்களில் அடிபட்டு, உயிரிழந்து கிடப்பதை பார்த்தாலும், ‘விதி அவ்வளோதான்’ என கடந்து சென்று விடுவோம். ஆனால், விதியை குறைசொல்லாமல், இலங்கையில் இதற்கு தீர்வு கண்டறிந்துள்ளனர். கயிறு பாலங்களை கட்டி, வன விலங்குகள் ரோட்டை கடக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இப்பதிவை பகிர்ந்த தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா சின்ன பாலம் என்றாலும், வன உயிர்களுக்கு பெரிய வெற்றி என குறிப்பிட்டுள்ளார்.
News September 23, 2025
தூங்காமல் நான் காணும் சொப்பனமே..

சில்லென்று காற்றாய் வந்து, கனவாய் கலைந்த சில்க் ஸ்மிதாவுக்கு இன்று பிறந்தநாள். நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமாவில், அந்தக்கால 80ஸ் கிட்ஸ்களுக்கு மட்டுமல்ல, 90ஸ் கிட்ஸ், 2K கிட்ஸ் என ஜெனரேஷன் கடந்தும் கனவுக்கன்னியாக இருக்கிறார் சில்க். தென்னிந்தியா சூப்பர் ஸ்டார்கள் பலரும் இவரின் கால்ஷீட்டுக்காக தவம் கிடந்த காலமும் உண்டு. உங்களுக்கு பிடித்த சில்க் ஸ்மிதா பாட்டு எது? வாழ்த்தை Likes-ஆக கொடுங்க.
News September 23, 2025
AI-ஆல் பெண்களுக்கு தான் அதிக பாதிப்பா!

AI-ஆல் ஆண்களை விட பெண்கள் வேலையிழக்கும் அபாயம் அதிகம் என ஐநா தெரிவித்துள்ளது. தொழில்நுட்பத்துறையில் பெண்களின் 28% வேலைகளும், ஆண்களின் 21% வேலைகளும் AI-ஆல் செய்யமுடியும். இதற்கு, இத்துறையில் பெண்கள் குறைவாக இருப்பதும் முக்கிய காரணமாக இருக்கிறது. இந்நிலை தொடர்ந்தால், 2030-க்குள் 34.3 கோடி பெண்கள் பாதிக்கப்படலாம். எனவே, இந்த பாலின பாகுபாடை உடனடியாக சரி செய்ய ஐநா வலியுறுத்தியுள்ளது.