News March 24, 2025
ஹார்ட் அட்டாக்குக்கு கொரோனாவே காரணம்

இன்றைக்கு இளம்வயதினர் பலர் மாரடைப்பால் உயிரிழப்பது குறித்து உலக புகழ்பெற்ற இதய நோய் மருத்துவர் ஜோஸ் சாக்கோ கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படுவதாக ஒரு தவறான கருத்து உள்ளது. மனித உடலில் கொரோனா வைரஸ் சில மாற்றங்களை செய்துள்ளது. ரத்த நாளங்களில் அது வீக்கங்களை ஏற்படுத்துகிறது. இதுவே, மாரடைப்பு தற்போது அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கலாம் என ஜோஸ் சாக்கோ தெரிவித்தார்.
Similar News
News March 25, 2025
வெள்ளியங்கிரியில் பக்தர் உயிரிழப்பு

கோவை மாவட்டம் வெள்ளியங்கிரியில் மலையேறிய பக்தர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலையைச் சேர்ந்த பக்தர் சிவா, மலையேறி சிவனை தரிசித்துவிட்டு, திரும்புகையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். வெயிலின் தாக்கத்தினாலும், முறையான மலையேறும் பயிற்சி இல்லாததாலும் பக்தர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
News March 25, 2025
அமித் ஷாவை சந்தித்த G.K.வாசன்

டெல்லியில் பாஜக மூத்த தலைவர் அமித் ஷாவை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நேரில் சந்தித்தார். கூட்டணி கட்சியான அவர், அதிமுகவை பாஜக கூட்டணியில் இணைக்க முயற்சி செய்வதாகத் தெரிகிறது. இன்று மாலை EPS அமித் ஷாவை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், ஜி.கே.வாசனின் சந்திப்பு அரசியலில் முக்கியத்துவம் பெறுகிறது.
News March 25, 2025
3 நாட்கள் தொடர் விடுமுறை

வரும் ஞாயிறு முதல் 3 நாட்கள் தொடர் விடுமுறையாகும். மார்ச் 29 (சனி), மார்ச் 30 (ஞாயிறு), மார்ச் 31 (திங்கள்) ரம்ஜான் என மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் மாணவர்கள், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏப்.1 (செவ்வாய்) வங்கிக் கணக்கு முடிவு நாள் என்பதால் வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை நாளாகும். இதையும் சேர்த்துக் கொண்டால் மொத்தம் 4 நாட்கள் விடுமுறை வருகிறது. இந்த லீவுல உங்கள் பிளான் என்ன?