News July 8, 2025

மழையால் சின்னாபின்னமான கூட்டுறவு வங்கி

image

இமாச்சலில் உள்ள துனாங் நகரில் சுமார் 8,000 வாடிக்கையாளர்கள் கொண்ட மாநில கூட்டுறவு வங்கி உள்ளது. மழை வெள்ளத்தால் இந்த வங்கியின் ஒரு கதவு அடித்துச் செல்லப்பட்டது. இரண்டு கதவுகள் வளைந்து சேதமடைந்தது. குப்பைகள், கட்டிட இடிபாடுகள், சகதிகள் முதல் தளத்தை முற்றிலுமாக மூடியுள்ளது. இதனால் வங்கியில் உள்ள லட்சக்கணக்கான பணம், அடகு வைத்திருந்த நகைகள் என்னவானது? என தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Similar News

News July 8, 2025

நயினார்னு யாரையும் தெரியாதே.. TN BJP பரிதாபங்கள்

image

வடசேரியில் இருக்கும் கிளைச் செயலாளருக்கு போன் செய்தபோது, தன்னை யாரென்றே தெரியாது என்று எதிர்முனையில் பேசியவர் கூறியதாக நயினார் நாகேந்திரன் வேதனையுடன் தெரிவித்துள்ளார். மேலும் ஒருவர், நயினார் என்பதை ‘நைனாவா?’ எனக் கேட்பதாகவும் கூறி வருத்தப்பட்டுள்ளார். இவ்வாறு தமிழக பாஜக ஆலோசனை மேடையிலேயே போட்டுடைத்த நாகேந்திரனின் குமுறலை பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

News July 8, 2025

செவ்வாய் தோஷம் நீங்க…

image

செவ்வாய் பகவானை, இந்த காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வணங்கி வழிபடுங்கள். திருமணம், சொந்த வீடு கனவு போன்றவை கைகூடும் என்பது ஐதீகம்.
ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ பெளமஹ் ப்ரசோதயாத்.
அர்த்தம்: வீரக் கொடியைக் கொண்டவரும், விக்னங்களைத் தீர்க்கும் கையை உடையவருமான செவ்வாய் பகவானை நாங்கள் தியானிக்கிறோம். அவர் எங்களை ஆசீர்வதிப்பாராக!

News July 8, 2025

4 ஆய்வறிக்கைகளை சமர்பித்த மாநில திட்டக்குழு

image

மாநில திட்டக்குழுவானது தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் திட்டங்களின் தாக்கங்கள், அது எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை ஆய்வு செய்வதோடு, அரசு கொள்கை முடிவெடுக்கின்ற வகையில் பல துறைகளில் ஆய்வு செய்து அறிக்கைகளை சமர்ப்பிக்கிறது. அந்தவகையில் தற்போது குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறைபாடு, சுரங்கங்கள் சீரமைப்பு, காலநிலை மாற்றம், வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பாக ஆய்வறிக்கைகளை முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளது.

error: Content is protected !!