News September 11, 2025
OTT-ல் வெளியானது ‘கூலி’

ரஜினி – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான கூலி அமேசான் பிரைம் OTT-யில் வெளியாகியுள்ளது. நாகர்ஜூனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் கடந்த மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீமிங் ஆகும் இப்படத்தை, தியேட்டரில் தவறவிட்ட ரசிகர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
Similar News
News September 11, 2025
‘ஆம்புலன்ஸ்’ அரசியல்.. செக் செய்த EPS

தனது பரப்புரைகளின் போது ஆம்புலன்ஸ்களை கொண்டு திமுக அரசு இடையூறு செய்தால், அதன் டிரைவரே ஆம்புலன்ஸில் செல்ல நேரிடும் என EPS கடுமையாக சாடினார். இந்த விவகாரம் பூதாகரமாக, அதிமுகவே ஆம்புலன்ஸில் செல்லும் நிலை வரும் என பதிலடி கொடுத்தார் உதயநிதி. இந்நிலையில், அந்த ஆம்புலன்ஸ் டிரைவரின் செல்போனை சோதித்ததில் நோயாளியிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை, இது திமுகவின் தந்திரம் என EPS குற்றஞ்சாட்டியுள்ளார்.
News September 11, 2025
அடகு வைத்த நகை மூழ்கும் அபாயமா? இதை பண்ணுங்க

கடன் வாங்க, இருப்பதிலேயே எளிமையான வழி என்றால் தங்கத்தை அடகு வைத்து கடன் வாங்குவது தான். ஆனால் சிலரால் இந்த கடனை அடைக்கமுடியாததால் அவர்களது நகை மூழ்கிவிடுகிறது. EMI தொகையை உங்களால் செலுத்த முடியவில்லை என்றால், அதற்கான காரணத்தை வங்கியிடம் விளக்கி, கடன் மறுசீரமைப்பு செய்யுமாறு கேட்கலாம். இது தவிர, நிலுவைத் தொகையில் பாதியை கட்டினால் உங்கள் நகையை மூழ்காமல் காப்பாற்ற முடியும். SHARE.
News September 11, 2025
பிரதமருக்கு இப்படி ஒரு பாதுகாப்பா?

ஒரு PM வரும்போது, அவருக்கு ஏன் இத்தனை கார்கள்? அதில் இருப்பவர்கள் யார்? அவர்கள் எப்படியான பாதுகாப்பை எதன் அடிப்படையில் வழங்குகின்றனர்? என்று உங்களுக்கு கேள்வி எழுந்திருக்கலாம். இதற்கான பதிலை, விரிவான தகவல்களுடன் மேலே உள்ள படங்களை Swipe செய்து பாருங்கள். இதுபோன்று வேறு ஏதேனும் உங்களுக்கு கேள்விகள் இருந்தால் கமெண்ட்டில் கேளுங்கள். வரும் நாள்களில் அவை செய்திகளாக வெளியிடப்படும்.