News August 10, 2025
கன்னட திரையுலகை ஆட்டிவைக்கும் ‘கூலி’!

ரஜினி- லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளிவர இருக்கும் ‘கூலி’ படத்துக்கு இருக்கும் எதிர்பார்ப்பு ப்ரீ புக்கிங்கிலேயே வெளிப்படுகிறது. கன்னட திரையுலகின் மெகா ஹிட் படமான ‘KGF 2’-வை விட பெங்களூருவில் ‘கூலி’ படத்துக்கு தான் அதிக புக்கிங் ஆகியுள்ளது. ‘கூலி’ படத்துக்கு வெறும் 37 நிமிடங்களில் 10 ஆயிரம் டிக்கெட்கள் விற்றுள்ளன. அதே நேரத்தில், KGF 2-க்கு 45 நிமிடங்களில் தான் 10 ஆயிரம் டிக்கெட்கள் விற்றன.
Similar News
News August 10, 2025
Way2News விநாடி வினா கேள்வி பதில்கள்..

காலை 11:30 மணிக்கு கேட்கப்பட்ட <<17359267>>கேள்விகளுக்கான <<>>பதில்கள்:
1. 1975
2. தாவரங்களின் இலைகள், தண்டுகள் & பாசிகளில் காணப்படுகிறது
3. கலீலியோ கலிலி (சில இடங்களில் ஐசக் நியூட்டனும் குறிப்பிடப்படுகிறார்)
4. செங்காந்தள்
5. மைத்துனர்.
News August 10, 2025
ஆக.15 முதல் ₹3,000 பாஸ் அமல்.. ரெடியா இருங்க!

ஆண்டுக்கு ₹3,000 செலுத்தி நாடு முழுதும் பயணிக்கும் புதிய, ‘FASTAG’ நடைமுறை வரும் 15-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த பாஸ், ஆக்டிவேட் செய்யப்பட்ட நாளில் இருந்து ஓராண்டு (அ) 200 முறை பயணிக்கலாம். வணிக நோக்கமற்ற தனியார் வாகனங்களுக்கான இத்திட்டத்தில் கார்கள், ஜீப்கள், வேன்கள் போன்ற வாகனங்கள் இந்த பாஸை பயன்படுத்தலாம். வாகன ஓட்டிகள் இந்த வருடாந்திர பாஸை ‘<
News August 10, 2025
பேச்சுவார்த்தை தோல்வி, திமுக அரசுக்கு தொடரும் நெருக்கடி

தலைநகரில் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், 7-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. இதனையடுத்து, திட்டமிட்டபடி போராட்டம் தொடரும் என போராட்டக்குழு அறிவித்துள்ளது. பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், இது திமுக அரசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. தலைநகரிலேயே இருக்கும் CM ஸ்டாலின், போராட்டக்காரர்களை ஏன் சந்திக்கவில்லை என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர்.