News August 18, 2025

₹400 கோடி வசூலை நெருங்கிய ‘கூலி’!

image

ரஜினி- லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான ‘கூலி’ படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும், வசூல் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. 4 நாள்களில் படம் இந்தியாவில் ₹194 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் உலகளவில் படம் ₹400 கோடியை குவித்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இந்த வருடத்தில் அதிகம் வசூலித்த தமிழ் படம் என்ற சாதனையையும் ‘கூலி’ செய்துள்ளது.

Similar News

News March 28, 2026

காங்கிரஸில் இணைந்தார் GKM தமிழ்க்குமரன்

image

பாமக கெளரவத் தலைவர் GK மணியின் மகனான தமிழ்க்குமரன், டெல்லியில் KC வேணுகோபால் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். பாமக ராமதாஸ் அணியின் இளைஞரணி தலைவராக இருந்த தமிழ்க்குமரன், தற்போது காங்கிரஸில் இணைந்துள்ளது அக்கட்சியினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸுக்கு பென்னாகரம் தொகுதி ஒதுக்கப்பட்டால், அங்கு அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. <<-se>>#TNElection2026<<>>

News March 28, 2026

போட்டி தொடங்கும் முன்பே.. RCB-க்கு SHOCK

image

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று IPL 2026 சீசன் தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் RCB உடன் SRH அணி மோதுகிறது. இந்நிலையில், காயம் காரணமாக RCB வீரர் ஜோஸ் ஹேசில்வுட் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் மற்றொரு வீரரான நுவான் துஷாராவும் விலகியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கெனவே தனிப்பட்ட காரணங்களால் யாஷ் தயாள் இந்த சீசனிலிருந்து வெளியேறினார்.

News March 28, 2026

BREAKING: அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்

image

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளராக டி.வி.பாலமுருகன் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று வெளியான வேட்பாளர் பட்டியலில் ஆத்தூரில் விஸ்வநாதன் என்பவர் போட்டியிடுவார் என EPS அறிவித்தார். இதனால், அதிருப்தி அடைந்த டி.வி.பாலமுருகன், அதிமுகவில் இருந்து விலகி, ஐ.பெரியசாமி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.TNElection2026

error: Content is protected !!