News February 23, 2025
சமையல் எண்ணெய் விலை உயர்வு!

உள்ளூர் விவசாயிகளை ஊக்கப்படுத்த, தாவர எண்ணெய் மீதான இறக்குமதி வரியை உயர்த்த, மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த செப்டம்பரில் இறக்குமதி வரி உயர்வு காரணமாக ₹110க்கு விற்ற ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெய், படிப்படியாக விலை உயர்ந்து தற்போது, ₹150 ஆக உள்ளது. அதேபோல, பாமாயில், ₹95லிருந்து ₹140 ஆன நிலையில், இது மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?
Similar News
News February 23, 2025
TN முழுவதும் நாளை முதல்வர் மருந்தகங்கள் திறப்பு

TNல் 1000 முதல்வர் மருந்தகத்தை நாளை CM ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். அதிகபட்சமாக மதுரையில் 52 மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளது. கடலூரில் 49, கோவையில் 42, தஞ்சையில் 40 மருந்தகங்கள் அமையவுள்ளன. PMன் மக்கள் மருந்தகம் உள்ளிட்ட எந்த மருந்தகங்களிலும் இல்லாத வகையில், குறைவான விலையில் மருந்துகள் வழங்கப்படும் எனவும், மக்களின் பொருளாதார சுமையை குறைக்க இது உதவியாக இருக்கும் என்றும் TN அரசு தெரிவித்துள்ளது.
News February 23, 2025
ஜகபர் அலி கொலை வழக்கு: 3 பேர் மீது குண்டாஸ்

சமூக செயற்பாட்டாளர் ஜகபர் அலி கொலை வழக்கில் கைதான 5 பேரில் 3 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது. குவாரி உரிமையாளர்கள் ராசு, ராமையா மற்றும் லாரி உரிமையாளர் முருகானந்தம் ஆகியோரை CBCID போலீசார் பரிந்துரையின் பேரில், ஆட்சியர் அருணா குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோத குவாரிகளுக்கு எதிராக புகார் கொடுத்த ஜகபர் அலி கடந்த ஜன.17ம் தேதி லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட்டார்.
News February 23, 2025
ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த நடிகை

ஆம் ஆத்மி கட்சியில் பிரபல நடிகை சோனியா மான் இணைந்துள்ளார். மலையாளம், தெலுங்கு, பஞ்சாபி மொழிகளில் ஏராளமான படங்களில் அவர் நடித்துள்ளார். பிரபல பாடகர் சித்து மூஸ் வாலா உள்ளிட்ட பலரின் இசை ஆல்பங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் அவர், அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார். அவர், விவசாய அமைப்புத் தலைவர்களில் ஒருவரான பல்தேவின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.