News February 13, 2025

சமையல் எண்ணெய் விலை உயர்வு

image

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர் சரிவால், சமையல் எண்ணெய் விலை கடந்த 2 வாரங்களில் மட்டும் 5% உயர்ந்துள்ளது. நாட்டின் சமையல் எண்ணெய் தேவையில் 60% இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, ஏற்றுமதி செய்யும் நாடுகளில் உற்பத்தி விலை அதிகரிப்பு ஆகிய காரணங்களால் கடந்த 2 வாரங்களில் சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு ₹6 வரை அதிகரித்துள்ளது.

Similar News

News February 13, 2025

மோடியின் ஆட்சி எப்படி? மக்கள் கருத்து

image

NDA அரசில் மிகப் பெரிய சாதனையாக மக்கள் எதை கருதுகிறார்கள் என்ற கருத்துக்கணிப்பை இந்தியா டுடே நடத்தியிருக்கிறது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டியது, காசி கோயிலை புனரமைத்தது போன்ற பணிகளை 15.2% பேர் சாதனை என கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரம் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை ஆகியவை மிகப் பெரிய தோல்வி என 20 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

News February 13, 2025

பும்ரா இல்லாதது இவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு: கம்பீர்

image

CT தொடரில் பும்ரா இல்லாதது ஷமி, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளதாக கம்பீர் தெரிவித்துள்ளார். பும்ரா முக்கியமான வீரர் என்பது உண்மைதான் எனவும், இருப்பினும் அவர் இடத்தை நிரப்ப மேற்கூறிய வீரர்கள் கடுமையாக முயற்சிப்பார்கள் என்றும் கம்பீர் கூறியுள்ளார். மேலும், ஷமி போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர் அணிக்கு திரும்பியதில் மகிழ்ச்சி என்று அவர் தெரிவித்துள்ளார்.

News February 13, 2025

நீதிமன்றத்தில் இளையராஜா ஆஜர்

image

தேவர்மகன், குணா உள்ளிட்ட 109 திரைப்படங்களின் பாடல்களை யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒளிபரப்பும் உரிமையை மியூசிக் மாஸ்டர் என்ற நிறுவனம் பெற்றுள்ளது. அனுமதி இல்லாமல் அந்த படங்களின் பாடல்களை சமூக வலைதளங்களில் பயன்படுத்துவதற்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. எதிர்மனுதாரராக இளையராஜா சேர்க்கப்பட்ட நிலையில், சாட்சியம் அளிப்பதற்காக அவர் இன்று நேரில் ஆஜரானார்.

error: Content is protected !!