News February 17, 2025

சமையல் கியாஸ் இணைப்பு: E-KYCக்கு கெடு இல்லை

image

சமையல் கியாஸ் கணக்குடன் E-KYC இணைப்பு மேற்கொள்ள காலக்கெடு விதிக்கப்படவில்லை என்று எண்ணெய் நிறுவனங்கள் விளக்கமளித்துள்ளன. மார்ச் 31க்குள் E-KYC செய்ய வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டு இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. ஆனால் இதை மறுத்துள்ள எண்ணெய் நிறுவன அதிகாரிகள், சமையல் எரிவாயு இணைப்பு வைத்திருப்போரில் இதுவரை 2.10 கோடி பேர் E-KYC செய்திருப்பதாக கூறியுள்ளனர்.

Similar News

News March 3, 2026

வியர்க்குருவுக்கு ‘பவுடர்’ யூஸ் பண்றது சரியா?

image

சம்மர் சீசனில், வாட்டி வதைக்கும் வியர்க்குருவை சமாளிக்க பலரும் வியர்க்குரு பவுடர்களை பயன்படுத்துகின்றனர். அந்த பவுடர்களில் menthol, camphor, zinc oxide போன்றவை இருக்க வேண்டும். இவற்றால், வியர்வை கொஞ்சம் உறிஞ்சப்படும். ஆனால், இந்த பவுடர் நிரந்தர நிவாரணம் அளிக்காது. ஆனால், இந்த பவுடரை அதிகமாக பயன்படுத்தினால், வியர்வை நாளங்களை அடைத்துக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

News March 3, 2026

சங்கீதாவுக்கு ₹250 கோடி வழங்க முடிவு செய்தாரா விஜய்?

image

மனைவி சங்கீதா விவாகரத்து கோரியது விஜய்யின் அரசியல் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் சுமுகமாக முடிவெடுக்க விஜய் முடிவு செய்துள்ளாராம். விவாகரத்து மனுவை திரும்பப் பெறக்கோரி விஜய் தரப்பில் இருந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தியதாக ஊடகமொன்றில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மனைவி சங்கீதா, மகன், மகளுக்கு ₹250 கோடி வழங்க விஜய் முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது.

News March 3, 2026

CINEMA 360: மீண்டும் மங்காத்தா காம்போ!

image

‘மங்காத்தா’வை தொடர்ந்து கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழித்து, அஜித்குமார் – வெங்கட் பிரபு காம்போ இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. *வெளியான 4 நாள்களில் ராதிகாவின் ‘தாய் கிழவி’ படம் கிட்டத்தட்ட ₹25 கோடி வசூல் செய்துள்ளதாம் *அல்லு அர்ஜுன் – அட்லீ படத்தின் டைட்டில் டீசர் ஏப்ரல் 8-ம் தேதி வெளியாகிறதாம் *19-ம் தேதி வெளியாகவுள்ள ‘துரந்தர் 2’ படம் 4 மணி நேரம் 5 நிமிடங்கள் ஓடும் என தகவல் வெளிவந்துள்ளது.

error: Content is protected !!