News May 18, 2024
தாறுமாறாக உயரும் வெள்ளி விலை

சென்னையில் வெள்ளியின் விலை 18 நாள்களில் கிலோவுக்கு ₹10,000 உயர்ந்து அதிர்ச்சியளித்துள்ளது. மே 1ஆம் தேதி ₹86,500ஆக இருந்த ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று ₹96,500ஆக விற்பனையாகிறது. குறிப்பாக இன்று ஒரே நாளில் வெள்ளி விலை கிலோவுக்கு ₹4000 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று வெள்ளி விலை கிராமுக்கு ₹4 உயர்ந்து ₹96.50க்கு விற்கப்படுகிறது.
Similar News
News August 20, 2025
உங்கள மட்டும் கொசு அதிகமா கடிக்குதா? இதான் காரணம்

ஒரு இடத்துல எவ்வளவு பேர் இருந்தாலும் உங்கள மட்டும் கொசு தேடிவந்து கடிக்கிதா? அதுக்கு சில காரணங்கள் இருக்கு. ▶உங்களுடைய Blood Group ’O’, ‘AB’-ஆ இருந்தா உங்கள கொசு அதிகம் கடிக்கும். ▶உடற்பயிற்சி செய்பவர்கள் அதிக கார்பன் டை ஆக்சைட் வெளியிடுறதுனால அவங்கள கொசுக்கள் தேடி வரும் ▶உடல் வெப்பம் ஒரு காரணமா இருக்கு. ▶டார்க் கலர் உடைகள அணியுறது, மது அருந்துறது இதெல்லாம் கொசுக்களோட ஃபேவரைட்ஸ். SHARE.
News August 20, 2025
மல்லை சத்யா மதிமுகவில் இருந்து தற்காலிக நீக்கம்

கட்சியின் சட்ட திட்டங்களுக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி மல்லை சத்யாவை மதிமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைகோ அறிவித்துள்ளார். 15 நாள்களுக்குள் எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்கவும் கெடு விதித்துள்ளார். துரை வைகோ – சத்யா இடையே முரண்பாடு எழுந்தபோது, சத்யாவை ‘துரோகி’ என வைகோ குறிப்பிட்டார். இதற்கு எதிராக அவர் போராட்டங்களை முன்னெடுத்த நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
News August 20, 2025
பொது அறிவு வினா- விடை

1. காவிரி நதி தமிழ் நாட்டில் நுழையும் இடம் எது ?
2. இஸ்ரோ எப்போது நிறுவப்பட்டது?
3. தமிழகத்தில் வெற்றிலைக்கு புகழ் பெயர் ஊர்?
4. பிஹு எந்த மாநிலத்தின் பாரம்பரிய நடனம்?
5. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு 21 வயதிலேயே கேப்டனானவர் யார்?
சரியான பதிலை கமெண்ட் பண்ணுங்க.. பதில்கள் மதியம் 2 மணிக்கு Way2News-ல் வெளியிடப்படும்.