News May 22, 2024
செல்லூர் ராஜூவை சுற்றிவரும் சர்ச்சை

நான் பார்த்து ரசித்து நெகிழ்ந்த இளம் தலைவர் ராகுல் என செல்லூர் ராஜூ கூறியது அரசியல் ரீதியாக விவாதப்பொருளாக மாறியது. இதுதொடர்பாக தெளிவான விளக்கமளித்த பின்பும், அதிமுக மீது அதிருப்தியில் இருப்பதால் தான் அவர் இப்படி பேசியிருக்கிறார். அவர் மீது அதிமுக தலைமை நடவடிக்கை தயாராகி விட்டது என்ற ரீதியில் சிலர் பேசுகின்றனர். ஆனால், அதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என அதிமுகவினர் உறுதிபடக் கூறுகின்றனர்.
Similar News
News August 30, 2025
‘சாதிவாரி வாட்ஸ்அப் குழுக்களில் அரசு அதிகாரிகள்’

போலீஸார், ஆசிரியர்கள், வருவாய் துறையினர் சாதி வாரியாக வாட்ஸ்அப் குழுக்களை நடத்துவதாக சிபிஎம் செயலாளர் பெ.சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழகத்தில் அதிகரித்து வரும் சாதி ஆணவக் கொலைகளுக்கு, அரசு நிர்வாகத்தின் அணுகுமுறைதான் காரணமென அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். அரசின் உயர் பொறுப்புகளில் இருக்கும் உயர் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர் பேசியுள்ளார்.
News August 30, 2025
Health Tips: மழைகாலத்தில் சாப்பிடவேண்டிய பழங்கள்

மழைக்காலத்தில் சளி, ஜுரம் எளிதில் வரும். இதனை தவிர்த்து நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் சில பழங்களை நீங்கள் உட்கொள்ளலாம். ஆப்பிள், மாதுளை, பேரிக்காய், நாவல் பழம், பப்பாளி, ப்ளம்ஸ், மற்றும் முலாம்பழம் போன்ற பழங்களை சாப்பிடுங்கள். இவை உங்கள் உடலில் நார் சத்து, நீர் சத்து, தோல் ஆரோக்கியம், அழற்சி எதிர்ப்பு பண்புகளை கூட்டுகிறது. SHARE.
News August 30, 2025
இனி விஜய் பற்றி கேட்காதீங்க.. கொந்தளித்த பிரேமலதா!

ECI, கோர்ட் இணைந்து ஜனநாயக முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என பிரேமலதா வலியுறுத்தியுள்ளார். நெல்லையில், பேசிய அவர், தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் இருப்பதால் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றார். மேலும், DMDK, TVK-வுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக வெளியான தகவலுக்கு, இனி தன்னிடம் விஜய் பற்றி எந்த கேள்வியும் கேட்க வேண்டாம் என ஆவேசமாக கூறினார். இது பற்றி உங்கள் கருத்து என்ன?