News April 2, 2024
பாஜக வேட்பாளரின் பேச்சால் சர்ச்சை

ஹரியானா மாநிலம் ஹிசார் தொகுதியின் பாஜக வேட்பாளர் ரஞ்சித் சவுதாலா. இவர் சமீபத்திய பேட்டியில், “சமூகத்தை சாதிகளாக பிரித்தது பிராமணர்கள். நாட்டில் நடக்கும் அனைத்து சாதியக் கொடுமைகளுக்கு பிராமணர்களே பொறுப்பு” என சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இவருக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள பிராமண சபா, பிராமணர்கள் ஒன்றுசேர்ந்து அவரை தோற்கடிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளது.
Similar News
News January 17, 2026
திருப்பத்தூர்: வாலிபர் விபரீத முடிவு

ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட குன்னத்தூர் பகுதியியை சேர்ந்த வாலிபர் பிரவின். நேற்று (ஜன.16) பிரவினின் பெற்றோர் இவரை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த பிரவின், துளசி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையறிந்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
News January 17, 2026
வாடிவாசலுக்கு விரைந்தார் முதல்வர் ஸ்டாலின்!

ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்க, CM ஸ்டாலின் மதுரை, அலங்காநல்லூருக்கு விரைந்துள்ளார். காலை 7:30 மணிக்கு போட்டி தொடங்கவுள்ளது. தமிழகம் முழுவதும் இருந்து 1,100 காளைகளுக்கும், அவற்றை அடக்க 600 காளையர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டுள்ளன. இன்றைய போட்டியில் அதிக காளைகளை அடக்கும் வீரருக்கு ₹20 லட்சம் மதிப்பிலான காரும், சிறந்த காளையின் உரிமையாளருக்கு ஒரு டிராக்டரும் பரிசாக வழங்கப்படவுள்ளன.
News January 17, 2026
நுரையீரல் கழிவுகளை நீக்கும் அமுக்கரா தேநீர்!

நுரையீரலில் கோர்த்துக் கொண்டிருக்கும் சளியை வெளியேற்றும் ஆற்றல் அமுக்கரா இலைக்கு இருப்பதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். அமுக்கரா இலை (3-4), மிளகு, மஞ்சள், சுக்கு, திப்பிலி, கிராம்பு, பட்டை, ஏலக்காய் ஆகியவற்றை நீரில் போட்டு, 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி, பனங்கற்கண்டு சேர்த்தால் மணமிக்க சுவையான அமுக்கரா தேநீர் ரெடி. இந்த டீயை எப்போது வேண்டுமானாலும் பருகலாம். SHARE IT.


