News August 29, 2025
சர்ச்சையான உதயநிதி selfie

பெண் காவல்துறை அதிகாரியை கன்னத்தில் அறைந்த திமுக மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஶ்ரீதரனுடன் உதயநிதி selfie எடுத்தது சர்ச்சையாகியுள்ளது. கள்ளக்குறிச்சியில் திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியின்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை உதயநிதி வெளியிட்டார். இதனையடுத்து, அந்த புகைப்படத்தை தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ள அண்ணாமலை, ‘அடடே, என்ன ஒரு ஆட்சி’ என்று சாடியிருக்கிறார்.
Similar News
News August 29, 2025
பொது அறிவு வினா விடை கேள்விகள்

1. இந்திய அரசியலமைப்புச் சட்டம் எப்போது அமலுக்கு வந்தது?
2. வீரமாமுனிவர் எந்த காப்பியத்தை இயற்றினார்?
3. மிகவும் லேசான உலோகம் எது?
4. இஸ்ரோவின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
5. டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்முதலில் 10,000 ரன்களை அடித்த வீரர் யார்?
சரியான பதில்களை கமெண்ட் செய்யவும். பதில்கள் மதியம் 2 மணிக்கு Way2News-ல் வெளியாகும்.
News August 29, 2025
நாளை கிளம்புகிறேன்.. சற்றுமுன் ஸ்டாலின் அறிவிப்பு

நாளை முதல் ஒரு வாரம் வெளிநாடுகளுக்குச் செல்லவுள்ளதாக CM ஸ்டாலின் சற்றுமுன் அறிவித்துள்ளார். இதன்படி, ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு அரசுமுறை பயணமாகச் செல்லும் அவர், தமிழகத்திற்கு முக்கிய முதலீடுகளை கொண்டுவர உள்ளார். திமுக ஆட்சி அமைந்த 4.5 ஆண்டுகளில் ₹10 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
News August 29, 2025
களத்தில் ஒழுங்கீனம்… பிரபல வீரருக்கு ₹37 லட்சம் அபராதம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றிலேயே நட்சத்திர வீரர் மெட்வதேவ் தோல்வி அடைந்து வெளியேறினார். பிரான்ஸ் வீரர் பெஞ்சமின் போன்சிக்கு எதிரான அந்த ஆட்டத்தில், நடுவர் மீதான கோபத்தால் ஆக்ரோஷமாக நடந்துகொண்ட அவர், <<17518533>>ராக்கெட்டை சேரில் அடித்தும் உடைத்தார்<<>>. இது பெரும் சர்ச்சையான நிலையில், அவருக்கு ₹37.24 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.