News April 12, 2025
சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கோரினார் பொன்முடி

பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்காக அமைச்சர் பொன்முடி மன்னிப்பு கேட்டுள்ளார். தகாத பொருளில் தவறான சொற்களை பயன்படுத்தி தாம் பேசிய பேச்சுக்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பதாக அவர் கூறியுள்ளார். தபெதிக விழாவில் பேசியபோது பெண்கள், சைவம், வைணவம் குறித்த அவர் வெளியிட்ட கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கனிமொழி உள்ளிட்டாேர் கண்டனம் தெரிவித்ததால், திமுகவில் அவரது பதவி பறிக்கப்பட்டது.
Similar News
News December 1, 2025
பார்வையற்றோருக்கான உதவிகளை செய்த ஆட்சியர்

திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சித் தலைவரின் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று (டிச.01) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், பார்வையற்றோருக்கான ஸ்மார்ட் கைபேசி மற்றும் ஸ்டிக் ஆகியவை இன்று மாவட்ட ஆட்சித் தலைவரின் கைகளால் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
News December 1, 2025
உலகளவில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?

உலகளவில் பல்வேறு துறைசார்ந்த தரவரிசை பட்டியல்களில் இந்தியா முன்னேறி வருகிறது. பொருளாதார வளர்ச்சியில், இந்தியா முன்னிலை வகிக்கிறது. இருப்பினும் சுற்றுச்சூழல், வாழ்க்கைமுறை உள்ளிட்ட சில துறைகளில் பின்தங்கி உள்ளது. குறிப்பாக சர்வதேச அளவில், எந்தெந்த துறைகளில் இந்தியா எந்த தரவரிசையில் உள்ளது என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 1, 2025
BREAKING: அண்ணா பல்கலை., தேர்வுகள் ஒத்திவைப்பு

கனமழை காரணமாக, நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலை., தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாளை விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்களிலும் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படும் என அண்ணா பல்கலை., அறிவித்துள்ளது. இதேபோல், நாளை நடைபெறவிருந்த சென்னை பல்கலை., தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


