News April 28, 2024
சர்ச்சையில் சிக்கிய விக்ரம் திரைப்படம்

விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்’ படத்துக்கு எதிராக சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்துள்ளார். சமீபத்தில் வெளியான படத்தின் போஸ்டரில், விக்ரம் 2 கைகளிலும் அரிவாள் வைத்து போஸ் கொடுத்துள்ளார். இந்நிலையில், விக்ரமின் இந்தப் போஸ்டர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் தவறான எண்ணத்தை தூண்டும் என்றும், எனவே இதுகுறித்து படக்குழு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 6, 2026
சற்றுமுன்: தங்கம் விலை மேலும் குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து இறக்கத்திலேயே நீடிக்கிறது. 1 அவுன்ஸ்(28g) 50 டாலர்கள் வரை குறைந்துள்ளது. இதே நிலை நீடித்தால், நாளையும் தங்கம் விலை கணிசமாக குறையும். சர்வதேச சந்தையில் நிலவும் சூழலால் நம்மூரில் தங்கம் விலை கணிசமாக குறைந்து வருகிறது. கடந்த 29-ம் தேதி சவரன் ₹1,34,400-க்கு விற்பனையான தங்கம், இன்று ₹1,12,960-க்கு விற்பனையாகிறது. அதாவது சவரனுக்கு ₹21,440 குறைந்துள்ளது.
News February 6, 2026
புளுகு மூட்டை திமுக: EPS

களத்திற்கு வந்து ஸ்டாலின் ஓட்டு கேட்டால் அவருக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல, வெறும் 0 தான் என EPS கூறியுள்ளார். மத்திய அரசு போதிய நிதியை வழங்கவில்லை என மக்களுக்கு திமுக அல்வா கொடுக்கிறது என்ற அவர், ரயில்வே திட்டங்கள் வரவில்லை என புளுகு மூட்டைகளை அரசு அவிழ்த்து விடுவதாகவும் பேசியுள்ளார். மேலும், தான் வகிக்கும் பதவிக்கு உள்ள கௌரவம், மரியாதையை CM எண்ணிப்பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
News February 6, 2026
ஹீமோகுளோபின் அதிகரிக்க இத குடிங்க போதும்!

ஹீமோகுளோபின் ரத்த சிவப்பணுக்களில் உள்ள இரும்புச்சத்து நிறைந்த புரதமாகும். ஹீமோகுளோபின் குறைபாடு ஏற்பட்டால், ரத்த சோகை பிரச்னை ஏற்படலாம். ஆதலால், உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க, டாக்டர்கள் சில எளிய ஜூஸ்களை பரிந்துரைக்கின்றனர். அவற்றை மேலே போட்டோக்களாக கொடுத்துள்ளோம். போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து பாருங்கள். உங்களின் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.


