News July 9, 2024

ரவுடியிசத்தை கட்டுப்படுத்த முன்னுரிமை

image

சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக அரசியல் கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு சென்னை காவல் ஆணையர் அருண் பதிலளித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்று எதன் அடிப்படையில் சொல்கிறார்கள்?. புள்ளி விவரங்கள்படி, பார்த்தால் குறைவான குற்றச்சம்பவங்களே நடந்திருக்கிறது. இருப்பினும், ரவுடியிசத்தை கட்டுப்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும்” எனப் பதிலளித்துள்ளார்.

Similar News

News September 24, 2025

வயிறு உப்புசத்திற்கு எளிதில் தீர்வு!

image

சாப்பிட்ட பிறகு வயிறு பலூன் போல் ஊதியிருந்தால் அது வயிறு உப்புசம் பிரச்னையாகும். செரிமானம் ஆகாத உணவு, காற்று சேர்வதால் வயிறு உப்பித் தெரியும். இதற்கு 10 பல் பூண்டுடன், கொஞ்சம் கல் உப்பை இடித்து சேர்த்து, மிளகுத்தூள் போட்டு நல்லெண்ணெய்யில் வதக்கி, 15 நிமிடத்திற்கு ஒவ்வொன்றாக சாப்பிட்டு தண்ணீர் குடித்து வந்தால், காற்று நீங்கி வயிறு இயல்பு நிலைக்கு திரும்பும். தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..

News September 24, 2025

செங்கோட்டையன் விரும்பினால் சந்திப்பேன்: OPS

image

செங்கோட்டையன் விரும்பினால் அவரை சந்திப்பேன் என OPS கூறியுள்ளார். மேலும், NDA கூட்டணியில், CM வேட்பாளராக EPS-ஐ ஏற்க முடியாது என்ற TTV தினகரனின் கருத்தை வரவேற்பதாகவும் OPS தெரிவித்துள்ளார். இது, மீண்டும் NDA கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?

News September 24, 2025

இந்த தலைமுறையா நீங்கள்?

image

ஏக்கர் கணக்கில் விவசாயம் செய்து, அதில் வரும் வருமானத்தை வைத்து 10 பெண் குழந்தைகளுக்கும் திருமணம் செய்த தலைமுறை நம் குடும்பத்திலேயே இருந்திருக்கலாம். இந்த பூர்வீக நிலத்தை வைத்தே வீடு கட்டி, திருமணம் செய்வது என தலைமுறைகள் மாறிக் கொண்டே வந்தது. ஆனால் தற்போதோ, சம்பாதிப்பதை கொண்டு அன்றாட வாழ்க்கையின் தேவைகளை நிறைவேற்றுவதில் மட்டுமே பெரும்பாலானோர் இருப்பதாக கூறப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!