News October 24, 2025
பாத வலி தீர்க்கும் ‘Contrast Bath therapy’

பாதங்களில் வலி உள்ளவர்களுக்கு `கான்ட்ராஸ்ட் பாத்’ சிகிச்சை பலனளிக்கும். இதை வீட்டிலேயே செய்யலாம். ஒரு பாத்திரத்தில் வெந்நீரும், இன்னொரு பாத்திரத்தில் சாதாரண தண்ணீரையும் நிரப்பிக்கொள்ள வேண்டும். அதில் கணுக்கால் வரை நீரில் முக்கி பாதத்துக்கான பயிற்சிகளை கொடுக்க வேண்டும். இருவகை தண்ணீரிலும் மாற்றி மாற்றி பயிற்சிகளை செய்ய வேண்டும். தினமும் காலை, மாலை இருவேளையும் செய்தால் வலி மறையும்.
Similar News
News October 24, 2025
பிஹாரில் மோடி இன்று பரப்புரை

பிஹார் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தொகுதி பங்கீடு முடிந்த நிலையில், NDA, INDIA கூட்டணி தலைவர்கள் பம்பரம் போல், மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி, சமஸ்திபூர் மற்றும் பெகுசராயில் இன்று நடைபெறவுள்ள தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று NDA கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்கிறார்.
News October 24, 2025
சற்றுமுன்: ஒரே நாளில் ₹3000 குறைந்தது..

தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்த நிலையில், வெள்ளி விலை தலைகீழாக தொடர்ந்து குறைந்து கொண்டே இருக்கிறது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ₹3 குறைந்து ₹171-க்கும், கிலோ வெள்ளி ₹3000 குறைந்து ₹1,71,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாள்களில் வெள்ளி விலை ₹36,000 குறைந்துள்ளது. இதனால், நகை பிரியர்கள் பலர் வெள்ளியை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.
News October 24, 2025
விஜய் ரசிகர்கள் தற்குறிகள்: ஜி.பி.முத்து

பிள்ளை போனாலும் பரவாயில்ல, விஜய்யை பார்த்தோம் என கரூர் துயரில் பாதிக்கப்பட்ட பெற்றோர் பேசியதை ஜி.பி.முத்து விமர்சித்திருந்தார். அவரை சோசியல் மீடியாவில் விஜய் ரசிகர்கள் விளாசினர். இந்நிலையில், தான் பேசியது சரி என ஜி.பி.முத்து பதிலடி கொடுத்துள்ளார். மேலும், விஜய்க்கு அசிங்கத்தை ஏற்படுத்துவதே அவருடைய ரசிகர்கள்தான் எனவும் இப்படி பேசித்தான் அவர்கள் தற்குறி என பெயர் வாங்கியிருப்பதாகவும் சாடியுள்ளார்.


