News March 31, 2025
தொடர் மின்தடை.. டெல்லி பாஜக அரசு மீது AAP தாக்கு

டெல்லியில் பாஜக அரசு அமைந்தது முதல் மின்தடை அதிகரித்து விட்டதாக AAP விமர்சித்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய AAP மூத்தத் தலைவர் அதிஷி, ஆம் ஆத்மி ஆட்சி செய்த 10 ஆண்டுகளில் இன்வர்டெர், ஜெனரேட்டர் தேவை குறைந்து இருந்ததாகவும், ஆனால் தற்போது மீண்டும் அதன் தேவை ஏற்பட்டு இருப்பதாகவும் கூறினார். டெல்லியை ஆட்சி செய்ய பாஜகவுக்கு தெரியவில்லை, அதற்கான தகுதி அக்கட்சியிடம் இல்லை எனவும் விமர்சித்தார்.
Similar News
News April 2, 2025
பழைய பஸ்களுக்கு விரைவில் Good Bye: அமைச்சர்

தமிழகத்தில் இயங்கி வரும் பழைய பஸ்கள் விரைவில் மாற்றி அமைக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் புதிய பஸ்கள் வாங்க டெண்டர் விடப்படுவதாகவும், அந்த வகையில் தற்போது மாநிலம் முழுவதும் 3,500 புதிய பஸ்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஒவ்வொரு வாரமும் புதிய பஸ்களை கொண்டு பழைய பஸ்கள் மாற்றி இயக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
News April 2, 2025
மார்ச்சில் ₹1.96 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்

கடந்த மார்ச் மாதத்தில் ₹1.96 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகி உள்ளது. இது 2024 மார்ச் மாத வசூலை விட 9.9% அதிகமாகும். அதேபோல், ஒட்டுமொத்த ஜிஎஸ்டியில், மத்திய ஜிஎஸ்டியாக ₹38,100 கோடி, மாநில ஜிஎஸ்டியாக ₹49,900 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாக ₹95,900 கோடி மற்றும் ஜிஎஸ்டி செஸ் ₹12,300 கோடி வசூலாகியுள்ளது. இதன்மூலம், 2024-25 நிதியாண்டில் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வசூல் 9.4% அதிகரித்து ₹22.08 லட்சம் கோடியாக உள்ளது.
News April 2, 2025
உலகளவில் பேசப்படும் கொரிய படங்கள்

OLDBOY: இப்படியும் பழிவாங்குவார்களா என ஆக்ஷன் தெறிக்க தெறிக்க உருவான இப்படம். Memories of Murders: கண்டுபிடிக்க முடியாத சைக்கோ கொலைகாரனை பற்றிய படம். பல இயக்குநர்களின் ஃபேவரைட் படம் இது. Moment to Remember: நினைவுகளை இழந்து வரும் மனைவியை பற்றிய எமோஷனல் காதல் படம். Parasite: உணவுக்கே கஷ்டப்படுபவர்களுக்கு செட்டில் ஆக ஒரு வாய்ப்பு கிடைத்தால் என்ன ஆகும் என்பதை பற்றிய ஆஸ்கர் வென்ற படம்.