News April 16, 2025
தொடர் விடுமுறை: 2,322 சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

வரும் வெள்ளிக்கிழமை புனித வெள்ளி என்பதால், விடுமுறை. அதேபாேல், சனி, ஞாயிறும் விடுமுறை வருகிறது. இந்த 3 நாள்கள் தொடர் விடுமுறைக்கு மக்கள் சொந்த ஊர் செல்வார்கள் என்பதால் 2,322 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து நாளை 575 பஸ்கள், வெள்ளி, சனிக்கிழமையில் தலா 450 பஸ்கள் இயக்கப்படும் என கூறியுள்ளது.
Similar News
News November 15, 2025
லோன் வாங்கியவர்களுக்கு ஹேப்பி நியூஸ்

வீடு, வாகனம், தனி நபர் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளது. செப்டம்பரில் 1.54% ஆக இருந்த நாட்டின் சில்லறை பண வீக்கம், அக்டோபரில் 0.25% ஆக குறைந்திருக்கிறது. இதனால், ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ரெப்போ வட்டி விகிதம் குறைந்தால், கடன்களுக்கான MCLR புள்ளிகளை வங்கிகள் குறைக்கும். இதனால், உங்களின் EMI குறையும். SHARE IT
News November 15, 2025
5.90 கோடி பேருக்கு SIR படிவங்கள் விநியோகம்: ECI

தமிழகத்தில் SIR பணிகள் கடந்த நவ.4-ம் தேதி தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் SIR படிவங்கள் 5.90 கோடி பேருக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ளதாக ECI தெரிவித்துள்ளது. அதாவது, மொத்தம் உள்ள 6.41 கோடி வாக்காளர்களில், 92.04% பேருக்கு படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. டிச.4 வரை SIR படிவங்கள் வழங்கப்படும்.
News November 15, 2025
பிஹார் வெற்றி நியாயமானதா?: கமல்ஹாசன்

பிஹார் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், அவர்கள் வெற்றியை கொண்டாடுவதில் தவறில்லை என்று கூறிய கமல்ஹாசன், இந்த வெற்றி நியாயமாக பெறப்பட்டதா என்பதை நாம் ஆராய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். SIR பணிகளை சரிபார்ப்பதில் அனைவருக்கும் பொறுப்பு உள்ளதாக கூறிய கமல், தன்னால் முடிந்ததை தனது எல்லைக்குள் செய்து வருவதாக குறிப்பிட்டார்.


