News April 10, 2025
குஜராத்துக்கு தொடரும் வெற்றி!

அகமதாபாத்தில் நடைபெற்ற RR-க்கு எதிரான ஆட்டத்தில் 217 ரன்களை GT குவித்தது. சாய் சுதர்சன்(82) அதிரடி ஆட்டத்தால் இமாலய இலக்கை நிர்ணயித்தது குஜராத். இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தானுக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. சஞ்சு சாம்சன்(41), சிம்ரான் ஹெட்மெயர்(52) சற்று ஆறுதல் அளித்தாலும், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த RR 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் GT 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Similar News
News September 4, 2025
ஹீரோயின்களுக்கு இதுதான் நிலை: தனுஷ் பட நடிகை

ஹிந்தியில் தனுஷுடன் இணைந்து ‘தேரே இஷ்க் மெய்ன்’ படத்தில் நடித்து வரும் கீர்த்தி சனோன், பாலிவுட்டில் நடிகர்களின் ராஜ்ஜியம் நடப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார். ஷூட்டிங்கில் நடிகர் வருகைக்காக நடிகைகளும் அதிகாலை முதலே காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாகவும், நடிகர்களை விழுந்து விழுந்து கவனிக்கும் தயாரிப்பாளர்கள், நடிகைகளை கண்டுகொள்வதே கிடையாது என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
News September 4, 2025
BREAKING: சோப்பு, டூத் பேஸ்ட் விலை குறைகிறது

அன்றாடம் பயன்படுத்தும் பல பொருள்களின் மீதான ஜிஎஸ்டி வரி 18% இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி தலைக்கு தேய்க்கும் எண்ணெய், ஷாம்பு, டூத் பேஸ்ட், சோப், ஷேவிங் கிரீம் விலை குறையும். சமையல் பாத்திரங்கள் மற்றும் பிறந்த குழந்தைக்கு பயன்படும் பொருள்களின் மீதான வரியும் 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் தையல் இயந்திரம் மற்றும் அதன் பாகங்கள் மீதான வரியும் 12% இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
News September 4, 2025
சற்றுமுன்: TV, பைக், ஏசி விலை குறைகிறது

28% ஜிஎஸ்டி வரம்பு நீக்கப்பட்டதால், அந்த பட்டியலில் இருந்த பெரும்பாலான பொருள்கள் 18% வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, ஏசி, டிவி (32 inch மேல்), கம்யூட்டர் மானிட்டர், புரொஜெக்டர், டிஷ் வாஷிங் மெஷின் உள்ளிட்டவை 18% வரம்பிற்கு மாற்றப்பட்டுள்ளன. மேலும், கார்கள், 3 சக்கர வாகனங்கள், பைக்குகள்(350cc-க்கு கீழ்) உள்ளிட்டவற்றின் ஜிஎஸ்டி 28%-ல் இருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது.