News May 15, 2024
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. தற்போது வரை RR 9 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 53 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறிவருகிறது. ஜெய்ஷ்வால் 4, கொஹலர் 18, சஞ்சு சாம்சன் 18 ரன்கள் எடுத்தனர். PBKS தரப்பில் சாம் கரண், நாதன் எல்லிஸ், ராகுல் சாஹர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இன்று RR எவ்வளவு ரன்கள் எடுக்கும் என நினைக்கிறீர்கள்?
Similar News
News December 18, 2025
MS தோனி பொன்மொழிகள்

*போராடி கிடைக்கும் தோல்விக்கூட கொண்டாடப்பட வேண்டிய ஒன்றுதான். *உங்களின் ஒரு வெற்றி, ஆயிரம் விமர்சனங்களுக்கான முற்றுப்புள்ளி. *ஒரு செயலை செய்ய வேண்டுமென்றால், செய்து முடித்துவிட வேண்டும், வேறு எதைப் பற்றியும் சிந்திக்க கூடாது. * உங்கள் தனித்திறன் என்னவோ அதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். வெற்றி உங்களுடையதாகிவிடும்.
News December 18, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கொடுங்கோன்மை ▶குறள் எண்: 553 ▶குறள்:
நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாள்தொறும் நாடு கெடும்.
▶பொருள்: ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள் தோறும் ஆராய்ந்து அவற்றுக்கு தக்கவாறு நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும்.
News December 18, 2025
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 18, மார்கழி 3 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM
▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: சதுர்த்தி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்.


