News April 28, 2025
இபிஎஸ்-சை முன்னிறுத்தியே தேர்தலில் போட்டி: வேலுமணி

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் இபிஎஸ்.சை முன்னிறுத்தியே போட்டி என்று அதிமுக EX அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். சென்னையில் அதிமுக அம்மா பேரவை ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் பேசிய வேலுமணி, தேர்தலில் இபிஎஸ் பெயரை தெரிவித்தே மக்களிடம் வாக்குகள் கோரப்படும் என்று கூறினார். இபிஎஸ்.சா? ஸ்டாலினா? என்றே 2026 தேர்தல் போட்டி களம் இருக்கும் என்றும் எஸ்.பி. வேலுமணி குறிப்பிட்டார்.
Similar News
News December 4, 2025
BREAKING: ஒரு மணி நேரத்தில் மாற்றிய செங்கோட்டையன்

எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படத்துடன் கார்த்திகை தீப வாழ்த்து தெரிவித்த பதிவை, <<18466560>>செங்கோட்டையன் <<>>பிற்பகல் 12.26 மணிக்கு நீக்கியிருந்தார். தவெக கொள்கை தலைவர்கள் உடன் MGR, ஜெ., புகைப்படமும் இருந்ததால் நீக்கப்பட்டதாக பேச்சு எழுந்தது. இதனையடுத்து, கட்சி மாறிய உடன் ஜெ., போட்டோவை நீக்கியதாக பலரும் கமெண்ட் செய்த நிலையில், அடுத்த ஒரு மணி நேரத்தில் நீக்கப்பட்ட போஸ்டரை மீண்டும் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
News December 4, 2025
வா வாத்தியார் படத்தை வெளியிட தடை!

கார்த்தி நடித்துள்ள ‘வா வாத்தியார்’ படத்தை வரும் 5-ம் தேதி வரை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வாங்கிய கடனை கட்டிய பிறகே படத்தை வெளியிட வேண்டும் என அர்ஜுன்லால் என்பவர் தொடர்ந்த வழக்கில், தடை விதிக்கப்பட்டுள்ளது. கார்த்தி, ராஜ்கிரண், கீர்த்தி ஷெட்டி ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை தை நலன் குமாரசாமி இயக்கியுள்ளார்.
News December 4, 2025
Thalaivar 173-ஆல் அப்செட் ஆனாரா லோகேஷ் கனகராஜ்?

‘Thalaivar 173’ படத்துக்கான உத்தேச இயக்குநர் பட்டியலில் தன் பெயர் இல்லை என்பது லோகேஷ் கனகராஜுக்கு தெரிந்துவிட்டது. இதையடுத்து, ரஜினிக்காக எழுதி வைத்திருந்த கதையைதான் கொஞ்சம் பட்டி, டிங்கரிங் செய்து அல்லு அர்ஜுனுக்கு ஏற்றதுபோல அவர் மாற்றியிருக்கிறாராம். இந்த நிலையில் கடந்த வாரம் மும்பையில் அல்லு அர்ஜுனை சந்தித்த லோகி, அவரிடம் கதையை சொல்லி ஒப்புதலும் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.


