News March 26, 2024
15 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தலில் போட்டி

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார். ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அவர், சம்பல்பூர் தொகுதியில் களம் காண்கிறார். கடைசியாக 2009ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட அவர் தோல்வியடைந்தார். இதனை தொடர்ந்து 2012ஆம் ஆண்டில் பீகாரில் இருந்தும், 2018ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேசத்தில் இருந்தும் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Similar News
News April 19, 2025
MBBS தமிழில் படிக்க நடவடிக்கை: மா.சுப்பிரமணியன்

மருத்துவக் கல்வியை 5 ஆண்டுகளும் தமிழில் படிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதே சமயம் இதில் சில சட்ட சிக்கல்கள் இருப்பதால், அது குறித்து தேசிய மருத்துவ கவுன்சிலுடன் ஆலோசிக்கப்படும் எனவும் கூறினார். தமிழகத்தில் மேலும் 6 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி கேட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
News April 19, 2025
அதிமுகவில் இணைந்த தவெக மாவட்ட பொறுப்பாளர்!

TVK ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் முள்ளிமுனை P.P.ராஜா அதிமுகவில் இணைந்தார். தனது ஆதரவாளர்களுடன் அதிமுக மாவட்டச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இதனை, ADMK IT விங் பதிவிட்டுள்ளது. விஜய் கட்சி தொடங்கி இன்னும் தேர்தலையே சந்திக்காத நிலையில், அவரது கட்சியிலிருந்து சிலர் விலகுவதும், கட்சிப் பொறுப்புக்கு பணம் வாங்குவதாக புகார் கூறுவதும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
News April 19, 2025
எங்களுக்கு வேற வழி தெரியல: டிரம்ப்

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றது முதல் உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரை நிறுத்த டிரம்ப் முயன்று வருகிறார். இரு தரப்பிடமும் 87 நாட்களாக தொடர்ந்து பேசி வருகிறார். இந்தச் சூழலில் இரு நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஒத்துவரவில்லை என்றால், தங்களால் என்ன செய்ய முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார். போர் நிறுத்த முயற்சியை கைவிடுவதை தவிர வேறு வழியில்லை என பெரிய குண்டை தூக்கி போட்டிருக்கிறார் டிரம்ப்.