News April 3, 2024
மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை

தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அனைத்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று ஆலோசனை நடத்துகிறார். மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19 இல் தொடங்கி ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் டிஜிபிக்களுடன் காணொளி காட்சி வாயிலாக இன்று ஆலோசனை நடைபெற உள்ளது.
Similar News
News August 18, 2025
ஆகஸ்ட் 22: தியேட்டர், ஓடிடி ரிலீஸ் லிஸ்ட்..

ஆகஸ்ட் 22ம் தேதி தமிழில் இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகிறது. ஒன்று வசந்த் ரவி நடித்துள்ள ‘இந்திரா’, மற்றொரு படம் ‘ சொட்ட சொட்ட நனையுது’. ஓடிடியிலும் சில படங்கள் வெளியாகிறது.
▶தலைவன் தலைவி (தமிழ்) – பிரைம்
▶மாரீசன் (தமிழ்) – நெட்ஃபிக்ஸ்
▶F1 தி மூவி (ஆங்கிலம்) – பிரைம் (வாடகை)
▶பீஸ் மேக்கர் – 2 (ஆங்கிலம்) – ஜியோ ஹாட்ஸ்டார்
News August 18, 2025
டிரம்ப் உடன் பேசியது என்ன? மோடிக்கு விளக்கிய புடின்

அலாஸ்காவில் USA அதிபர் டிரம்ப் உடனான சந்திப்பின்போது பேசப்பட்டது குறித்து ரஷ்ய அதிபர் புடின் தொலைபேசியில் எடுத்துரைத்ததாக PM மோடி தெரிவித்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் இடையேயான போருக்கு சுமுக தீர்வு காண இந்தியா தொடர்ந்து முயன்று வருவதாகவும், இருநாட்டு உறவுகள்(இந்தியா – ரஷ்யா) தொடர்பாக வரும் நாள்களில் வளர்ச்சிக்கான பரிமாற்றங்கள் நடைபெறும் என்றும் தனது X பக்கத்தில் மோடி குறிப்பிட்டுள்ளார்.
News August 18, 2025
இந்திய ரயில்வேயின் ஹைடெக் ஐடியா..!

பசுமை ரயில் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் தண்டவாளங்களுக்கு இடையே சோலார் பேனல்கள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் பணியில் இந்திய ரயில்வே ஈடுபட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த பணிகள், வாரணாசியில் உள்ள பனாரஸில் தொடங்கியுள்ளது. அங்கு, 28 பேனல்கள் அமைத்து 15KWp மின்சாரம் தயாரித்து ரயில் இன்ஜின் இயக்கப்பட்டதாக X தளத்தில் ரயில்வே பதிவிட்டுள்ளது. நல்ல முயற்சி என பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.