News March 17, 2024

புதுகை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

image

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 தொடர்பாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News January 21, 2026

புதுக்கோட்டை: 110 கிலோ கஞ்சா பறிமுதல்!

image

மணமேல்குடி பகுதியில் கடலோர பாதுகாப்பு குழு போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்தோணியார் புரத்தில் உள்ள நாட்டுப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சாவை கடத்த முயன்றதை கண்டறிந்தனர். இதனை அடுத்து கஞ்சாவை கடத்த முயன்ற ஆரோக்கிய ராகுல் (35), சிவசங்கர் (31) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 110 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

News January 20, 2026

புதுக்கோட்டை: மின் பிரச்சனையா? இதோ தீர்வு

image

புதுக்கோட்டை மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!’

News January 20, 2026

புதுகை: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

image

புதுகை மாவட்ட மக்களே உங்கள் பகுதி ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்காமல் இருப்பது, தரமில்லாத பொருட்கள் வழங்குவது, பணியாளர்கள் நேரத்திற்கு வராமல் இருப்பது, பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அப்படியென்றால் உடனே 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களால் புகார் அளிக்க முடியும். இந்த தகவலை மறக்காமல் மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!