News March 18, 2024
திருச்சியில் ஆலோசனைக் கூட்டம்

மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்.பியுமான ப.குமார் தலைமையில், தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பூத் கமிட்டியை வலுப்படுத்துவது, பிரச்சார வியூகங்களை பலப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்டன.
Similar News
News January 22, 2026
திருச்சி: ஆடு வளர்ப்பு பயிற்சி வகுப்பு அறிவிப்பு

திருச்சி கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், வரும் பிப்.6 ஆம் தேதி ஆடு வளர்ப்பு பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதில் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆட்டு இனங்கள், ஆடுகளை தேர்ந்தெடுத்து வாங்குதல் மற்றும் நோய் தடுப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு 0431-2331715 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி மைய தலைவர் தெரிவித்துள்ளார்.
News January 22, 2026
திருச்சி: கழிவுநீரில் சடலமாக கிடந்த ஆண்

மணப்பாறை அடுத்த விடத்திலாம்பட்டியைச் சேர்ந்த சிவக்குமார். கூலித்தொழிலாளியான இவரை காணவில்லை என அவரது குடும்பத்தினர் தேடி வந்தனர். இந்நிலையில் அதே பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் நேற்று முந்தினம் இறந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த மணப்பாறை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 22, 2026
திருச்சி: மின்தடை அறிவிப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை, தியாசேகர் ஆலை, விடத்திலாம் பட்டி, மற்றும் பன்னாங்கொம்பு ஆகிய துணை மின் நிலையத்தில் நாளை (ஜன.23) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக அங்கிருந்து மின்விநியோகம் பெறும் மணப்பாறை நகரம், வெள்ளக்கல், நொச்சிமேடு, பொத்தமேட்டுப்பட்டி, மஞ்சம்பட்டி, முத்தப்புடையான்பட்டி, களத்துப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.!


