News January 28, 2025
இந்து தேசத்திற்கான அரசியலமைப்பு தயார்

அகண்ட இந்து தேசத்திற்கான அரசியலமைப்பு இறுதி செய்யப்பட்டுவிட்டது. அதை வரும் 2ஆம் தேதி மத்திய அரசுக்கு அனுப்ப உள்ளதாக, அதை உருவாக்கிய ஹிந்து ராஷ்டிரா சம்விதான் நிர்மல் சமிதி அமைப்பு தெரிவித்துள்ளது. 501 பக்கங்களைக் கொண்ட அரசியலமைப்பை, 25 இந்து சாஸ்திர அறிஞர்கள் உருவாக்கியுள்ளனர். இது மனுதர்மம், ராமாயணம், கிருஷ்ணரின் போதனைகள், அர்த்தசாஸ்திரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 30, 2025
விஜய்யின் அடுத்த ஸ்கெட்ச்.. ஈரோட்டில் புதிய அத்தியாயம்

வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து மக்கள் சந்திப்பை நடத்த அக்கட்சி தலைவர் விஜய் முடிவு செய்துள்ளாராம். தவெகவின் கொள்கை தலைவரான தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17-ம் தேதி, ஈரோட்டில் இருந்து முதல் மக்கள் சந்திப்பை நடத்த விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில், இன்று பனையூரில் மாவட்ட செயலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
News August 30, 2025
மனதை தீண்டும் ‘சீதா ராமம்’ மிருணாள் தாகூர்

சின்னத்திரையில் தனது சினிமா பயணத்தை தொடங்கி இன்று வெள்ளித்திரையில் பிரபல நடிகையாக ஜொலிப்பவர் மிருணாள் தாகூர். துல்கர் சல்மானுக்கு அவர் ஜோடியாக நடித்த ‘சீதா ராமம்’ படம் பெரும் வரவேற்பை பெற்று தந்தது. சினிமாவில் பிஸியாக இருந்தாலும் சோஷியல் மீடியாவிலும் செம ஆக்டிவாக மிருணாள் தாகூர் உள்ளார். சமீபத்தில் சேலை அணிந்து அவர் பகிர்ந்த போட்டோஸ் டிராண்டாகியுள்ளன. மேலே உள்ள போட்டோஸை கண்டு ரசியுங்கள்…
News August 30, 2025
இன்று காலை வெளிநாடு புறப்படுகிறார் ஸ்டாலின்

தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கவும், அயலக தமிழர்களை சந்திக்கவும் ஜெர்மனி, இங்கிலாந்தில் CM ஸ்டாலின் 7 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். அதன்படி, இன்று காலை 9 மணிக்கு CM விமானத்தில் ஜெர்மனிக்கு புறப்பட்டுச் செல்கிறார். இன்று இரவு 9 மணிக்கு ஜெர்மனி சென்றடையும் அவருக்கு அயலக தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். முதலீட்டாளர்களை முதல்வர் நாளை சந்திக்கிறார்.