News March 27, 2025
தொகுதி மறுவரையறை.. தெலங்கானாவில் தீர்மானம்

MP தொகுதி மறுவரையறைக்கு எதிராக தெலங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்தியில் ஒரே கட்சி ஆட்சியில் இருக்கவே, வடமாநிலங்களின் தொகுதிகளை அதிகரிக்க முற்படுவதாகவும், தங்கள் மாநில மக்களின் உரிமையை என்றும் விட்டுத்தரமாட்டோம் எனவும் அம்மாநில CM ரேவந்த் சூளுரைத்துள்ளார். மேலும், அனைத்து கட்சிகளுடன் ஆலோசித்த பிறகே தொகுதி மறுவரை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News November 7, 2025
டெல்லியில் ஒரு குத்து.. பிஹாரில் ஒரு குத்து: ராகுல்

பாஜக தலைவர்கள் சிலர் டெல்லி, பிஹார் என 2 மாநிலங்களில் வாக்களித்துள்ளதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். ம.பி., சத்தீஸ்கர், ஹரியானாவில் வாக்கு திருட்டில் ஈடுபட்டவர்கள், தற்போது பிஹாரிலும் தொடர்வதாகவும் அவர் சாடியுள்ளார். முன்னதாக, பாஜக MP ராகேஷ் சின்ஹா, டெல்லி பாஜக நிர்வாகி சந்தோஷ் ஓஜா கடந்த பிப்.,-ல் டெல்லியில் வாக்களித்துவிட்டு, தற்போது பிஹாரில் வாக்களித்துள்ளதாக ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியது.
News November 7, 2025
நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த வாரத்திற்கான மழை விடுமுறையை ஈடுசெய்ய நாளை(சனிக்கிழமை) பள்ளிகள் இயங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், சென்னையில் நாளை பள்ளிகள் இயங்காது என அறிவிப்பு வெளியாகி மாணவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.
News November 7, 2025
FLASH: விலை ஒரே அடியாக ₹8,000 அதிகரித்தது

கடந்த 2 மாதங்களாக தங்கம், வெள்ளி விலை விண்ணை முட்டும் வகையில் உயர்ந்து மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இந்நிலையில் அதன் தாக்கம் பட்டிலும் எதிரொலித்துள்ளது. குறைந்த அளவிலான ஜரிகைகள் கொண்ட காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள் இதற்கு முன்பு ₹10,000 – ₹12,000 வரை விற்கப்பட்டன. ஆனால் அதன் விலை ₹20,000 ஆக தற்போது அதிகரித்துள்ளது. தங்கம் வெள்ளியை தொடர்ந்து பட்டும் ஏழை எளிய மக்களுக்கு எட்டா கனியாக மாறியுள்ளது.


