News March 22, 2025
தொகுதி மறுசீரமைப்பு: பிரதமருக்கு ஜெகன் கடிதம்

சென்னையில் திமுக தலைமையில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடந்த நிலையில், ஆந்திர முன்னாள் CM ஜெகன் மோகன் ரெட்டி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். நாடாளுமன்றத்தில் எந்த மாநிலத்திற்கும் பிரதிநிதித்துவம் குறையக் கூடாது என வலியுறுத்தியுள்ளார். மேலும், மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்காதவாறு மறுசீரமைப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News March 23, 2025
தனுஷ் இயக்கத்தில் அஜித்? வெளிவந்த அப்டேட்

தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படும் செய்தியாக இருந்து வருகிறது. தற்போது ‘இட்லி கடை’ படத்தை இயக்கி வரும் தனுஷ், அதன் பின் அஜித்தை இயக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரிடம் கேட்டபோது, தகவலை மறுக்காத அவர், முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகக் கூறியுள்ளார்.
News March 23, 2025
மகளிர் உரிமைத்தொகை ₹1,000 யார், யாருக்கு கிடைக்கும்?

மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கம் குறித்து அமைச்சர் அறிவித்த பிறகு இ-சேவை மையங்களில் விண்ணப்பங்கள் குவிகின்றன. சுமார் 50 லட்சம் பேர் புதிதாக விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்ளை செய்யும் போதே அரசு நிர்ணயித்த <
News March 23, 2025
கோலி கணக்கில் இன்னொரு ரெக்கார்ட்

400 டி20 போட்டிகளில் விளையாடிய 3ஆவது இந்திய வீரராக கோலி உருவெடுத்துள்ளார். நேற்றைய KKR உடனான போட்டியின் போது, அவர் இந்த சாதனை படைத்துள்ளார். முன்னதாக ரோஹித் ஷர்மா 448, தினேஷ் கார்த்தி 412 போட்டிகளிலும் விளையாடியுள்ளனர். அதேபோல், டி20யில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் கோலி 12,945 ரன்களுடன் 5ஆவது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் 14,562 ரன்களுடன் கெயில் முதலிடத்தில் உள்ளார்.