News April 16, 2024
எதிர்க்கட்சியினரை என்ஐஏ மூலம் கைது செய்ய சதி!

தேர்தல் நேரத்தில் விசாரணை நிறுவனங்களை பாஜக அரசு தவறாகப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை முடக்கப் பார்க்கிறது என்று மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். கூச் பெஹாரில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது பேசிய அவர், “தோல்வி பயத்தில் உள்ள பாஜக, முதல்கட்ட வாக்குப் பதிவுக்கான நாள் நெருங்கும் சமயத்தில் என்ஐஏ விசாரணை முகமை மூலம் எதிர்க்கட்சியினரை கைது செய்ய சதித்திட்டம் தீட்டி வருகிறது” என்றார்.
Similar News
News January 9, 2026
சற்றுமுன்: ஒரே நாளில் ₹4,000 குறைந்தது.. HAPPY NEWS

வெள்ளி விலை இன்று (ஜன.9) கிராமுக்கு ₹4 குறைந்து ₹268-க்கும், 1 கிலோ வெள்ளி ₹4,000 குறைந்து ₹2,68,000-க்கும் விற்பனையாகிறது. ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் வெள்ளி விலை 2 நாள்களில் மட்டும் கிலோவுக்கு ₹9,000 குறைந்துள்ளது. அதேநேரம், தங்கம் விலை இன்று உயர்ந்த நிலையில், வெள்ளி குறைந்துள்ளதால் நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News January 9, 2026
உலகின் மிகவும் கஷ்டமான தேர்வுகள் இவைதான்!

எக்ஸாம் என்றாலே நம்மில் பலருக்கும் கஷ்டம்தான். ஆனால், எவ்வளவு கஷ்டப்பட்டு படித்தாலும், பாஸ் பண்ணுவதற்கு மிகவும் கடினமான தேர்வுகளும் உலகில் நடத்தப்பட்டு வருகின்றன. அப்படி உலகின் டாப் 9 கடினமான தேர்வுகளை கொடுத்துள்ளோம். அவை என்னென்ன என தெரிஞ்சிக்க மேலே உள்ள போட்டோவை வலது பக்கம் Swipe செய்யுங்க. நீங்க எழுதிய கஷ்டமான எக்ஸாம் எது?
News January 9, 2026
ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக இருக்கிறது: ராமதாஸ்

CM ஸ்டாலின் ஆட்சி நன்றாக தான் இருக்கிறது. ஆட்சியில் பங்கு கேட்கமாட்டோம் என பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தைலாபுரத்தில் பேசிய அவர், காங்கிரஸுக்கு ஆட்சியில் பங்கு கேட்பதில் விருப்பம் இருந்தாலும், கலைஞரின் ஆட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்தேன் என கூறியுள்ளார். அன்புமணி அதிமுகவுடன் கூட்டணி அறிவித்துள்ள நிலையில், ராமதாஸின் பேச்சு அவர் திமுக கூட்டணிக்கு செல்கிறாரோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.


