News August 7, 2024
வினேஷ் போகத் தகுதி நீக்கத்தில் சதி?

வினேஷ் போகத் தகுதி நீக்கத்தில் சதி இருப்பதாக குத்துச்சண்டை வீரர் விஜயேந்தர் சந்தேகம் எழுப்பியுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்கில், மகளிருக்கான 50 கிலோ மல்யுத்தப் போட்டியில், இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள விஜயேந்தர், 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததற்காக எல்லாம் தகுதிநீக்கம் செய்ய மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 15, 2025
சோஷியல் மீடியாவில் ஆதார் போட்டோ போடுறீங்களா?

யாரும் சோஷியல் மீடியாவில் தங்களது ஆதார் அட்டையின் போட்டோவை பதிவிட வேண்டாம் என UIDAI எச்சரித்துள்ளது. நிதி மோசடிகள், அடையாள திருட்டுகள் போன்றவற்றை தவிர்க்க, இந்த அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஆதார் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற சந்தேகம் இருந்தால், சைபர் கிரைம் Helpline 1930, UIDAI ஹெல்ப்லைன் 1947 அல்லது help@uidai.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் புகார் அளிக்கலாம். SHARE IT.
News December 15, 2025
40 தொகுதிகளில் காங்., போட்டியா?

டெல்லியில் காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கருடன் செல்வப்பெருந்தகை ஆலோசனை செய்து வருகிறார். இதன்பின், ராகுலை சந்தித்து திமுக கூட்டணியில் எத்தனை இடங்களை கேட்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கும் அவர், எந்தெந்த தொகுதிகளில் காங்., வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதற்கான லிஸ்ட்டையும் வழங்கவிருக்கிறார். 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளை காங்., குறிவைத்துள்ளதாம்.
News December 15, 2025
BREAKING: வங்கிக் கணக்கில் ₹1,000 வந்தது

மகளிர் உரிமைத்தொகை ₹1,000 சற்றுமுன் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. கடந்த 12-ம் தேதி ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ நிகழ்ச்சியில் 2-ம் கட்ட திட்ட விரிவாக்கத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 17 லட்சம் மகளிருக்கு ₹1,000 செலுத்தப்பட்டது. இந்நிலையில், ஏற்கெனவே பயன்பெற்று வரும் 1.13 கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் 28-வது தவணை தற்போது வரவு வைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு வந்துவிட்டதா?


