News September 29, 2025

விஜய்க்கு எதிராக கூட்டு சதி: TVK வழக்கறிஞர்

image

விஜய் பிரசாரத்திற்கு எதிராக கூட்டு சதி நடந்துள்ளதாக தவெக வழக்கறிஞர் குற்றஞ்சாட்டியுள்ளார். கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு ஒரே இரவில் அவசர அவசரமாக உடற்கூராய்வு செய்தது எப்படி; அனைவரையும் உடற்கூராய்வு செய்ய அவ்வளவு மருத்துவர்கள் எங்கிருந்து வந்தனர் என்று கேள்வி எழுப்பிய அவர், பிரசாரம் செய்த இடத்திற்கு அதிகளவில் ஆம்புலன்ஸ் வந்ததிலும் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார்.

Similar News

News December 8, 2025

சித்தோடு அருகே வசமாக சிக்கிய இருவர்: அதிரடி கைது

image

சித்தோடு செங்குந்தபுரம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரிடம் இரண்டு இளைஞர்கள் கத்தியை காட்டி ரூ.2 லட்சம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். தகவல் அறிந்து சென்ற சித்தோடு போலீசார் 2 வாலிபர்களையும் கையும், களவுமாக பிடித்து விசாரணை நடத்தியதில், கருங்கல்பாளையத்தை சேர்ந்த காஜாமொய்தீன் (33) மற்றும் ஹரிபிரசாத் (28) என்பது தெரியவந்தது. இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

News December 8, 2025

Sports Roundup: F1 உலக சாம்பியன் ஆனார் நோரிஸ்

image

*அகமதாபாத்தில் நடந்த பெண்களுக்கான டி20 டிராபி காலிறுதியில் கர்நாடகாவிடம் தமிழகம் தோற்றது. *மேஜர் லீக் கால்பந்து 30-வது சீசனில், இண்டர் மயாமி முதல்முறையாக கோப்பையை வென்றது. *F1 கார்பந்தயத்தின் சிறந்த டிரைவருக்கான உலக சாம்பியன் பட்டத்தை இங்கிலாந்தின் லாண்டோ நோரிஸ் கைப்பற்றினார். *கர்நாடகா கிரிக்கெட் சங்க தலைவர் தேர்தலில் EX இந்திய பவுலர் வெங்கடேஷ் பிரசாத் வெற்றி.

News December 8, 2025

சிவன், விநாயகருக்கு உரிய நாள்: இன்று இப்படி வழிபட்டால்..

image

இன்று சிவனுக்கு உரிய திங்கள்கிழமையும், விநாயகருக்கு உரிய சதுர்த்தியும் ஒரே நாளில் வருவது அபூர்வமான ‘சோம சங்கடஹர சதுர்த்தி’ ஆகும்.. இன்று மாலை 6 மணிக்கு மேல் விநாயகருக்கு அருகம்புல் சாத்தி வழிபடுங்கள். சந்திர தரிசனம் செய்து, ‘ஓம் விக்ன ராஜாய நமஹ’ என்ற ஸ்லோகத்தை 108 முறை உச்சரியுங்கள். வாழ்வில் தீராத சங்கடங்கள், தடைகள் அனைத்தும் நீங்கும். முழு நம்பிக்கையுடன் செய்யுங்கள், நல்லதே நடக்கும்!

error: Content is protected !!