News September 14, 2024
திருமா நேரில் அழைத்தால் பரிசீலனை: ADMK

மதுஒழிப்பு மாநாட்டிற்கு திருமாவளவன் நேரில் அழைத்தால், அதில் பங்கேற்பது குறித்து பரிசீலனை செய்வோம் என்று அதிமுக தெரிவித்துள்ளது. விசிக அழைப்பு குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு ஜெயக்குமார் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார். ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என திருமாவளவன் பேசிய வீடியோ குறித்த கேள்விக்கு, அக்கட்சியுடன் கூட்டணி அமைந்தாலும், ஆட்சி அதிகாரத்தில் அதிமுக பங்கு தராது என்றார்.
Similar News
News November 23, 2025
மாதம் ₹12,400 கிடைக்கும்.. APPLY NOW!

2025-26 கல்வியாண்டில் ME, MTech, M.Design படிப்புகளை தேர்வு செய்த மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை AICTE வெளியிட்டுள்ளது. மாணவர்களின் GATE/CEED ஸ்கோர் அடிப்படையில் மாதந்தோறும் ₹12,400 உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. மாணவர்கள் தங்கள் பயிலும் நிறுவனங்களில் ID பெற்று, டிசம்.15க்குள் <
News November 23, 2025
2026 T20 WC: இந்தியா vs பாக்., போட்டி எப்போது தெரியுமா?

2026 T20 WC பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், SA மற்றும் NZ அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் தேர்வு செய்யப்படும், இந்திய வீரர்கள் தான், T20 உலகக்கோப்பைக்கும் தேர்வு செய்யப்பட உள்ளதாக BCCI வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், இந்தியா தனது முதல் போட்டியில் (பிப்.8) அமெரிக்காவையும், பிப்.15-ல் நடைபெறும் போட்டியில் பாகிஸ்தானையும் எதிர்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
News November 23, 2025
திமுக, அதிமுக ரூட்டிலேயே செல்லும் விஜய்

திராவிட கட்சிகள் இலவசங்களை வழங்கி மக்களின் வாக்குகளை கவர்வதாக ஒரு பேச்சு எப்போதும் இருந்து வருகிறது. அக்கட்சிகளை கடுமையாக விமர்சிக்கும் விஜய்யும், தவெக ஆட்சிக்கு வந்தால் ஒரு நிரந்தர வீடு, பைக் என இன்று அறிவித்திருக்கிறார். இந்நிலையில், ‘சர்க்கார்’ படத்தில் இலவச கிரைண்டரை நெருப்பில் வீசிய அதே விஜய் தான், தற்போது இலவசங்களை கையிலெடுப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். உங்கள் கருத்து?


