News March 29, 2024
அடுத்தடுத்து மயக்கம்.. மருத்துவமனையில் அனுமதி

நாமக்கல் ராசிபுரம் அருகே எம்பி சின்ராஜூக்கு சொந்தமான ஆலையில் தேநீர் அருந்திய 15 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. பல்லி விழுந்த தேநீரை குடித்ததில் 15 பேர் அடுத்தடுத்து வாந்தி மயக்கமடைந்துள்ளனர். உடனே அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் நேரத்தில் எம்பியின் ஆலையில் இதுபோன்ற சம்பவம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Similar News
News November 27, 2025
D55 ஷூட்டிங் எப்போது? அசத்தல் அப்டேட்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள ‘D 55’ படத்தின் ஷூட்டிங் 2026, ஜனவரியில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘மாரி 2’ படத்திற்கு பிறகு சாய் பல்லவி, தனுஷுடன் ஜோடி சேரவுள்ளார். மேலும், இப்படத்தின் டிஜிட்டல் ரைட்ஸை Netflix தளம் வாங்கியுள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. ஷூட்டிங் முன்பே வியாபாரத்தை தொடங்கியுள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
News November 27, 2025
1 நிமிடம் இதை படியுங்கள்… இத செய்யவே செய்யாதீங்க!

இரவுநேரம் வந்துவிட்டாலே மொபைல் அல்லது டிவி பார்ப்பது நம் வழக்கமாகிவிட்டது. மொபைல், டிவி தொடர்ந்து பார்க்கும்போது, அவற்றில் இருந்து வெளியாகும் நீல ஒளி, உங்கள் மூளையை கிளர்ச்சியடைய செய்து, இன்னும் பகல்நேரம் தான் உள்ளது என்பதுபோல் காட்டுகிறது. இதனால், தூக்கத்துக்கு காரணமான மெலடோனின் என்ற ஹார்மோன் சுரப்பை தடுத்து, உறக்கத்தை கெடுத்து, மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. முக்கிய தகவலை SHARE பண்ணலாமே.
News November 27, 2025
கார் vs கர்சீப்: ஸ்டாலின் – EPS கடும் மோதல்

நெல் ஈரப்பத தளர்வு கோரிக்கைக்காக PM-ஐ சந்திக்கிறேன் என EPS கூறினால், அரசு சார்பில் தானே வியர்க்காத அளவு நல்ல கார் ஏற்பாடு செய்து தருகிறேன் என CM ஸ்டாலின் சாடியிருந்தார். இந்நிலையில், ரெட் ஜெயண்ட் வாசலுக்கு ரெய்டு வந்ததும் வியர்க்க விறுவிறுக்க, வியர்வையை துடைக்க கர்சீப்பை கூட மறந்துவிட்டு டெல்லிக்கு பதறிப் பறந்ததையெல்லாம் மறந்துவிட்டீர்களா என EPS விமர்சித்து கேள்வி எழுப்பியுள்ளார்.


