News March 24, 2025
திருப்பரங்குன்றம் கோயிலுக்கு குடமுழுக்கு

ஜூலை 14ஆம் தேதி திருப்பரங்குன்றம் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். இதற்கு முன் 2012ஆம் ஆண்டு இக்கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ரோப் கார் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட (₹26 கோடி) அதிக செலவு ஆவதால் (₹32 கோடி) விரைவில் கூடுதல் நிதி ஒதுக்கி திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
Similar News
News November 21, 2025
அஜித் குமார் மரணம்.. அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்

காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில், முதலில் சூடுபிடித்த சிபிஐ விசாரணையில் தற்போது சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உரிய நேரத்தில் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், நவ.27-க்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு அன்றைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அஜித் குமார் கொலை குறித்த மேலும் பல உண்மைகள் குற்றப்பத்திரிகையில் வெளியாக வாய்ப்புள்ளது.
News November 21, 2025
புதிய தொழிலாளர் சட்டங்கள்: முக்கிய அம்சங்கள் 1/2

இன்று அமலுக்கு வந்துள்ள புதிய தொழிலாளர் சட்டங்களின் படி: *ஒப்பந்த தொழிலாளர்களுக்கு, நிரந்தர தொழிலாளர்களுக்கு இணையான சலுகைகள் (சமூக பாதுகாப்பு, சம்பளத்துடன் விடுப்பு, ஒராண்டுக்கு பின் gratuity) *Gig, Platform பணியாளர்களுக்கு அங்கீகாரம். *அனைத்து பணியாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு *எத்துறையாக இருந்தாலும் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம், குறிப்பிட்ட தேதிக்குள் சம்பளம். *அனைவருக்கும் இலவச ஹெல்த் செக்-அப்.
News November 21, 2025
புதிய தொழிலாளர் சட்டம்: இனி Night Shift-ல் பெண்கள் 2/2

இன்று அமலுக்கு வந்துள்ள புதிய தொழிலாளர் சட்டங்களின் படி: *பாதுகாப்பு மற்றும் ஒப்புதல் அடிப்படையில் அனைத்து துறைகளிலும் பெண்கள் இரவுப்பணி செய்ய அனுமதி *ஆண், பெண் இருபாலருக்கும் சமமான ஊதியம் *கட்டாய ஹெல்த் செக்-அப் & பாதுகாப்பு நெறிமுறைகள் *ஒப்பந்த, புலம்பெயர்ந்த மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பலத்த பாதுகாப்பு *அனைத்து தொழிலாளர்களுக்கும் அப்பாயின்மெண்ட் லெட்டர் வழங்குவது கட்டாயம்.


