News December 20, 2024
காங்., நிலை பாஜகவிற்கு வரும்: மாயாவதி எச்சரிக்கை

அமித்ஷா கூறிய வார்த்தைகள், அம்பேத்கரின் கண்ணியத்தை வெகுவாக காயப்படுத்தி உள்ளதாக மாயாவதி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், தான் கூறிய வார்த்தைகளை திரும்பப் பெற்று வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அதை செய்யத் தவறும் பட்சத்தில், பாபா சாகேப்பிற்கு காங்கிரஸ் செய்ததை, மக்கள் எப்படி மறக்காமல் உள்ளனரோ, அதேநிலை தான் பாஜகவிற்கும் ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
Similar News
News July 5, 2025
பாகிஸ்தானில் அலுவலகத்தை மூடிய மைக்ரோசாஃப்ட்

உலகளவில் மிகப்பெரிய IT நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பாகிஸ்தானில் உள்ள தனது அலுவலகத்தை மூடியுள்ளது. உலகளாவிய மறுசீரமைப்பு, கிளவுட்-பேஸ்டு மாற்றம் போன்ற காரணத்திற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மைக்ரோசாஃப்டின் இந்த நடவடிக்கை பாகிஸ்தானின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
News July 5, 2025
இறுதி போட்டிக்கு முன்னேறிய திண்டுக்கல்

TNPL குவாலிபையர் 2-ல் திண்டுக்கலுக்கு எதிராக முதலில் விளையாடிய சேப்பாக் 178 ரன்களை சேர்த்தது. அந்த அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை என்றாலும் கேப்டன் அபராஜித்(67), ஜெகதீசன்(81) சிறப்பாக விளையாடி அணியை நல்ல ஸ்கோர் எட்ட உதவினர். தொடர்ந்து விளையாடிய திண்டுக்கல்லில், பாபா இந்திரஜித், விமல் அதிரடியாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச்சென்றனர். திண்டுக்கல் – திருப்பூர் பைனலில் மோத உள்ளன.
News July 5, 2025
மகளிர் உரிமை தொகை பெற ஜுலை 15யில் விண்ணப்பம்

கலைஞர் மகளிர் உரிமை திட்டம் 2023ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் சுமார் 1.16 கோடி பெண்கள் முதல்கட்டமாக பயனடைந்தனர். மேல்முறையீடு மூலம் 1.48 லட்சம் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில்
இத்திட்டத்தில் புதிய பயனாளிகளைச் சேர்க்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி ஜூலை 15ம் தேதி முதல் ‘மக்களுடன் முதல்வர் ஸ்டாலின்’ முகாம்களில் இதற்கான விண்ணப்பங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.