News February 24, 2025
காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் அறிவிப்பு

அகமதாபாத்தில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் ஏப்ரல் 8ஆம் தேதி நடைபெற உள்ளது. முதல் நாளில் விரிவாக்கப்பட்ட காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டமும், அதைத் தொடர்ந்து ஏப்ரல் 9ஆம் தேதி கட்சி பிரதிநிதிகள் கூட்டமும் நடைபெறுகிறது. இரண்டு கூட்டங்களுக்கும் மல்லிகார்ஜூன கார்கே தலைமை தாங்க உள்ளார். இதில் அரசியல் அமைப்பின் மீதான தாக்குதல் மற்றும் கட்சியின் எதிர்கால திட்டம் தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளது.
Similar News
News February 24, 2025
PAKக்கு இன்னும் வாய்ப்பு இருக்கு!

CT அரையிறுதிக்கு தகுதி பெற PAK அணிக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது. வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ள BANக்கு எதிரான போட்டியில் PAK அணி கட்டாயம் வெல்ல வேண்டும். அதேபோல், இன்றைய NZக்கு எதிரான போட்டியில் BAN அணி வெல்ல வேண்டும். மேலும், மார்ச் 2ல் நடைபெறும் போட்டியில் NZஐ IND வீழ்த்தினால் மட்டுமே, ரன்ரேட் அடிப்படையில் PAK அரையிறுதிக்குள் நுழைய முடியும். இதில் ஒன்று தவறினாலும் வெளியேற வேண்டியதுதான்.
News February 24, 2025
திமுக நிர்வாகிகள் அடுத்தடுத்து நீக்கம்

திமுகவில் கடந்த சில நாட்களாக மாவட்ட பொறுப்பாளர்கள் அடுத்தடுத்து நீக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கிருஷ்ணகிரி நகரச் செயலாளர் எஸ்.கே.நவால், நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.மதுரா, தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலாளர் தடங்கம் சுப்பிரமணி என மேற்கு மாவட்டங்களைக் குறிவைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது மற்ற நிர்வாகிகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளதாக பேசப்படுகிறது.
News February 24, 2025
1 மணி நேரம் மொபைல் பார்த்தாலும் ஆபத்து

தினமும் 1 மணி நேரம் மொபைல், டிஜிட்டல் ஸ்கிரீன்களை பார்த்தாலும், அது Myopia எனும் கிட்டப்பார்வை குறைப்பாட்டை ஏற்படுத்த, 21% வாய்ப்புள்ளதாக JAMA Network Open ஆய்வில் தெரியவந்துள்ளது. பார்க்கும் நேரம் கூட கூட, இந்த சதவிகிதம் அதிகரிக்கும் எனவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 3.35 லட்சம் பேரிடம் நடத்திய ஆய்வில், 1 மணி நேரத்திற்கும் குறைவாக பார்ப்பது பெரிய ஆபத்து இல்லை என தெரியவந்துள்ளது.