News June 4, 2024

வாக்குறுதிகளை காங்கிரஸ் நிறைவேற்றும்: ராகுல்

image

பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளை காங்கிரஸ் நிச்சயம் நிறைவேற்றும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களவைத் தேர்தல் முடிவானது பிரதமர் மோடிக்கு விடுக்கப்பட்ட மிகப் பெரிய எச்சரிக்கை என்றார். தேர்தல் களத்தில் இருந்தது போலவே, தற்போதும் INDIA கூட்டணி ஒற்றுமையுடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Similar News

News March 14, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அமைச்சியல் ▶அதிகாரம்: அமைச்சு ▶குறள் எண்: 632 ▶குறள்: வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு ஐந்துடன் மாண்டது அமைச்சு. ▶பொருள்: அமைச்சரவை என்பது, துணிவுடன் செயல்படுதல், குடிகளைப் பாதுகாத்தல், அறநூல்களைக் கற்றல், ஆவன செய்திட அறிதல், அயராத முயற்சி ஆகிய ஐந்தும் கொண்டதாக விளங்க வேண்டும்.

News March 14, 2026

உச்சநீதிமன்ற நிர்வாகத்தை இனி AI கவனிக்கும்!

image

கடந்த 2022-ல் Ex SC CJI சந்திரசூட் அமர்வால் தள்ளுபடி செய்யப்பட்ட ஒரு வழக்கு, தற்போது ஒரு புதிய அமர்வின் முன் மீண்டும் பட்டியலிடப்பட்டது சர்ச்சையானது. இதுகுறித்த விசாரணையில் SC-ன் பதிவகத்தில் உள்ள குறைபாடுகள் வெளிச்சத்துக்கு வந்தன. இதையடுத்து வழக்கு ஒதுக்கீடு & அமர்வுகளைத் தீர்மானிக்கும் பணிகளில் மனிதக் குறுக்கீட்டை நீக்கிவிட்டு, AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த CJI சூர்யா காந்த் முடிவெடுத்துள்ளார்.

News March 14, 2026

எங்கள் ஆடையால் உங்களுக்கு என்ன பிரச்னை? ராஷி கண்ணா

image

எந்தவொரு பெண்ணுக்கும் தனக்கு பிடித்த ஆடைகளை அணியும் சுதந்திரம் உண்டு என்று ராஷி கண்ணா கூறியுள்ளார். ​​<<19291889>>நடிகைகளின் உடை அணியும் பாணி <<>>குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், எந்த ஆடையை அணிய வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுப்பது அந்த பெண்ணின் தனிப்பட்ட விருப்பம் மற்றும் உரிமை சார்ந்தது என்றார். அத்துடன் நாங்கள் அணியும் ஆடையால் உங்களுக்கு என்ன பிரச்சனை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!