News October 1, 2025
கரூர் விவகாரத்தில் காங்., தலையிட வேண்டும்: திருமா

கரூர் கொடுந்துயரத்தில் தனது அரசியல் விளையாட்டை பாஜக வெளிப்படையாக விளையாட தொடங்கிவிட்டதாக திருமாவளவன் விமர்சித்துள்ளார். உண்மை கண்டறியும் குழுவை பாஜக நியமித்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்த விவகாரத்தில் காங்., தலையிட்டு, உண்மை கண்டறியும் குழுவை நியமித்து, பாஜகவின் சதியை முறியடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News March 19, 2026
சாதி இட ஒதுக்கீடு ஒழிக்கப்படும்: நாதக வாக்குறுதி

நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சீமான் வாக்குறுதி அளித்துள்ளார். மேலும், *சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு முற்றிலும் ஒழிக்கப்பட்டு, தமிழ் குடிமக்களுக்கு இட ஒதுக்கீடு அறிமுகம் செய்யப்படும். *தமிழ் மொழியில் மருத்துவக் கல்வி. *மணல் கொள்ளையை தடுக்க தனிப்படை. *நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பது முற்றிலும் தடுக்கப்படும் உள்ளிட்ட <<19423818>>பல வாக்குறுதிகள்<<>> இடம் பெற்றுள்ளன.
News March 19, 2026
சசிகலாவுடன் ராமதாஸ் கூட்டணியா?

சசிகலாவுடன் இணைந்து ராமதாஸ் தரப்பு தேர்தலைச் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் இணைவதற்கு அன்புமணி முட்டுக்கட்டை போட்டார். திமுக கூட்டணியில் இணையவும் ஆதரவாளர்கள் விரும்பாததால், தவெகவுடன் கூட்டணி வைக்க பலர் ஆதரவு தெரிவித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற கூட்டத்தில் சசிகலாவுடன் இணைந்து வட மாவட்டங்களில் 40 இடங்களில் நிற்க ராமதாஸ் முடிவெடுத்துள்ளாராம்.
News March 19, 2026
சற்றுமுன்: விலை ₹10,000 குறைந்தது

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து, வெள்ளி விலையும் இன்று மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ₹10 குறைந்து ₹265-க்கும், கிலோ வெள்ளி ₹10,000 குறைந்து ₹2,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 11-ம் தேதி கிலோ வெள்ளி ₹3,00,000-க்கு விற்பனையான நிலையில், 8 நாள்களில் ₹35,000 குறைந்துள்ளது.


