News June 18, 2024
பாஜகவின் விமர்சனத்திற்கு காங்கிரஸ் பதிலடி

ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவதை வயநாடு மக்களிடம் ராகுல் வெட்கமின்றி மறைத்து விட்டதாக, பாஜக மூத்த தலைவர் ராஜூவ் சந்திரசேகர் விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள காங்., மூத்த தலைவர் பவன் கேரா, 2014இல் வாரணாசியில் போட்டியிட போவதை மோடி வதோதரா மக்களிடம் மறைத்ததை போலவா? என வினவியுள்ளார். 2014 தேர்தலில் இரு தொகுதிகளில் வெற்றி பெற்ற மோடி, வதோதரா தொகுதியில் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 12, 2026
தமிழக தேர்தல் தேதி.. முக்கிய தகவல் வெளியானது

TN உள்ளிட்ட 5 மாநிலங்களின் பேரவைத் தேர்தல் தேதிகளை நிர்ணயிக்க டெல்லியில் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்துகிறது. இதில் TN, புதுவை, மேற்கு வங்கம், கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் அட்டவணை குறித்து முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 20-க்கு பிறகு வாக்குப்பதிவும், மே முதல் வாரத்தில் வாக்கு எண்ணிக்கைக்கும் வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
News March 12, 2026
கேஸ் தட்டுப்பாடு.. மின் கட்டண சலுகை கிடைக்குமா?

வணிக சிலிண்டர் நிறுத்தப்பட்டதால் ஹோட்டல்களை இழுத்து மூடும் நிலை வந்துள்ளது. இந்நிலையில், மின் அடுப்புகளுக்கு மாறுவதற்கு ஏற்படும் செலவுகளை சமாளிக்க, மின் கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும் என ஹோட்டல் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அப்படி சலுகை கிடைக்கவில்லை எனில், உணவின் விலை கணிசமாக உயரும். இந்த சுமை மக்களின் தலை மீதே விழும் என்கின்றனர்.
News March 12, 2026
பெண்களை காவு வாங்கும் இருண்ட மாடல் ஆட்சி: நயினார்

TN-ல் 2, 7 மற்றும் 17 வயது என பெண் பிள்ளைகள் தினந்தோறும் காமக் கொடூரர்களின் பிடியில் சிக்கி தவிப்பதாக நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். இருண்ட மாடல் ஆட்சியில் <<19356260>>தூத்துக்குடியில் மாணவி<<>> வன்கொடுமை செய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்டதாக வெளிவந்துள்ள செய்திக்கு அரசு என்ன பதில் சொல்லப்போகிறது என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பெண்களின் கண்ணீரால் திமுக அரசு அழியும் எனவும் சாடியுள்ளார்.


