News April 25, 2024

இடஒதுக்கீட்டை பறிக்க காங்., திட்டம்

image

எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி, இடஒதுக்கீட்டை மத அடிப்படையில் பிரித்து, அதனைப் பறிக்க காங்., திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கியபோதே, மத அடிப்படையில் இடஒதுக்கீடு கிடையாது என அம்பேத்கர் தலைமையில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், காங்., மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை கொண்டுவந்து அரசியலமைப்பை மாற்ற முயற்சிக்கிறது என விமர்சித்துள்ளார்.

Similar News

News January 3, 2026

Sports 360°: இந்திய ஹாக்கி அணிக்கு புதிய கோச்

image

*இந்திய மகளிர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக ஸ்ஜோர்ட் மரிஜ்னே நியமனம் *மகளிர் ஹாக்கி லீக்கில், ராஞ்சி ராயல்ஸ் 2-0 என்ற கோல் கணக்கில் சூர்மா கிளப்பை வீழ்த்தியது *ILT20 இறுதிப்போட்டிக்கு, MI எமிரேட்ஸ் முன்னேற்றம் *கோமாவில் உள்ள ஆஸி., வீரர் டேமின் மார்டினின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் *68-வது தேசிய ஷூட்டிங் சாம்பியன்ஷிப் மகளிர் 10மீ ரைபிள் பிரிவில், அமீரா அர்ஷத் தங்கம் வென்றார்

News January 3, 2026

எதில் அதிக நேரம் செலவாகிறது?

image

OTT, Reels உள்ளிட்டவைகளில் நேரம் செலவிடுவது அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக, இந்தியாவின் திரை பயன்பாட்டு நுகர்வு முறைகளை பற்றி தனியார் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இதில், 2025-ல் பார்வையாளர்கள் எதில் தங்களது நேரத்தை செலவிடுகின்றனர் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. நீங்கள் எதில் நேரத்தை செலவிடுகிறீர்கள்? கமெண்ட்ல சொல்லுங்க.

News January 3, 2026

கோயிலில் மதவெறியை வளர்க்கக் கூடாது: சேகர்பாபு

image

கன்னியாகுமரி கோயில் நிகழ்ச்சியில் அமைச்சர் <<18742042>>சேகர்பாபு<<>> பக்தர்களை திட்டிய விவகாரம் பெரும் சர்ச்சையானது. இந்நிலையில், அமைதி காக்கும் இடத்தில் மனிதநேயத்தை வளர்க்க வேண்டும், மதவெறியை வளர்க்கக் கூடாது என சேகர்பாபு தெரிவித்துள்ளார். பாரத் மாதா கி ஜே என்ற முழக்கத்தை கோயிலுக்கு வெளியே சொல்லட்டும் எனவும், ஆன்மிகமும், பக்தியும் அறத்தைதான் உணர்த்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!